அரியலூர்,மே:15
தமிழகம் மற்றும் புதுச்சேரியில் மார்ச் மாதம் நடந்து முடிந்து பிளஸ் 1 தேர்வு முடிவுகள் திங்கள்கிழமை நேற்று காலை வெளியிடப்பட்டன. இதில் 94.96 சதவீதம் பெற்றும் மாநில அளவில் அரியலூர் மாவட்டம் 5 ஆவது இடத்தை பிடித்துள்ளது.
மாவட்டத்தில், 92 பள்ளிகளைச் சேர்ந்த 4,218 மாணவர்கள், 4,401 மாணவிகள் என 8,819 பேர் பிளஸ் 1 பொதுத் தேர்வு எழுதினர். இந்த தேர்வுக்கான முடிவுகள் வெளியிடப்பட்டன.
இதில் 3918 மாணவர்கள், 4,267 மாணவிகள் என 8,192 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். தேர்ச்சியில் 94.96 சதவீதம் பெற்று, மாநில அளவில் அரியலூர் மாவட்டம் 5 ஆவது இடத்தை பிடித்துள்ளது. ஏற்கனவே பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் மாநில அளவில் முதல் இடத்தையும், பிளஸ் 2 பொதுத் தேர்வில் மாநில அளவில் 3 ஆம் இடத்தை அரியலூர் மாவட்டம் பிடித்துள்ளது என்பது குறிப்பிடதக்கது.
பள்ளிகள் வாரியாக….
54 அரசு பள்ளிகளில் இருந்து 2,529 மாணவர்கள், 2,387 மாணவிகள் என ஆக மொத்தம் 4,916 பேர் தேர்வு எழுதினர். இதில் 2,285 மாணவர்கள், 2, 265 மாணவிகள் என மொத்தம் 4,550 பேர் தேர்ச்சி பெற்றனர். அரசுப் பள்ளி தேர்ச்சி சதவீதம் 92.55 ஆகும்.
9 அரசு உதவி பெறும் மேல்நிலைப் பள்ளிகளில் பயின்ற 674 மாணவர்கள், 1,332 மாணவிகள் என மொத்தம் 2,006 பேர் தேர்வு எழுதினர். இதில் 622 மாணவர்கள், 1,321 மாணவிகள் என மொத்தம் 1,943 பேர் தேர்ச்சி பெற்றனர். அரசு உதவி பெறும் பள்ளிகள் தேர்ச்சி சதவீதம் 96.86 ஆகும்.
2 அரசு ஆதிதிராவிட நல மேல்நிலைப் பள்ளிகளில் பயின்ற 39 மாணவர்கள், 23 மாணவிகள் என மொத்தம் 62 பேர் தேர்வு எழுதினர். இதில் 36 மாணவர்களும், 23 மாணவிகளும் ஆக மொத்தம் 59 தேர்ச்சி பெற்றுள்ளனர். தேர்ச்சி சதவீதம் 95.61 ஆகும்.
18 மெட்ரிக் மேல்நிலைப்பள்ளிகளில் பயின்ற 828 மாணவர்கள், 582 மாணவிகள் என மொத்தம் 1,410 பேர் தேர்வு எழுதினர். இதில் 827 மாணவர்கள், 582 மாணவிகள் என மொத்தம் 1,409 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். தேர்ச்சி சதவீதம் 99.93 ஆகும்.
9 சுயநிதி மேல்நிலைப் பள்ளிகளில் பயின்ற 148 மாணவர்கள், 77 மாணவிகள் என மொத்தம் 225 பேர் தேர்வு எழுதினர். இதில் 148 மாணவர்கள், 76 மாணவிகள் என மொத்தம் 224 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். தேர்ச்சி சதவீதம் 99.56 ஆகும்.
அரியலூர் மாவட்டம் 94.96 சதவீதம் தேர்ச்சி பெற்று மாநில அளவில் 5 ஆம் இடத்தை பிடித்துள்ளது.