நாகர்கோவில் மே 13
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் நடைபெற்ற தேசிய அளவிலான மூல நோய் குறித்த கருத்தரங்கில் நாடு முழுவதும் இருந்து ஏராளமான மருத்துவர்கள் கலந்து கொண்டனர்.இந்த கருத்தரங்கில் கலந்து கொண்ட இந்திய மருத்துவ சங்க முன்னாள் தலைவரும், காமன்வெல்த் மருத்துவ சங்க செயலாளருமான டாக்டர். ஜெயலால் செய்தியாளர்களிடம் கூறுகையில், இன்றைய காலத்தில் நிறைய மக்களுக்கு உள்ள பிரச்சனை மலம் வரும்போது எரிச்சல், மலச்சிக்கல் போன்றவை ஏற்பட்டு மூல நோய் உருவாகி வருகிறது. தனிப்பட்ட முறையில் அவர்கள் பாதிக்கப்படும் பொழுது இதனை வெளியே சொல்ல அச்சப்படுகிறார்கள். இதற்காக அவர்கள் குறுக்கு வழியில் பல்வேறு மருத்துவத்தை மேற்கொண்டு மேலும் தன்னுடைய உடலுக்கு கேடு விளைவிக்கும் வகையில் தள்ளப்படுகிறார்கள். இந்த நோயைப் பொறுத்த வரைக்கும் இன்று மருத்துவ ரீதியாக முப்பது சதவீத மக்கள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், இது இன்றைய நவீன மருத்துவத்தில் சிறிய அறுவை சிகிச்சை மூலம் சரி செய்து கொள்ளலாம் என்றும் குறிப்பாக பாத்ரூமில் இருந்து புத்தகம் படித்தல், புகைபிடித்தல், செல்போன் பார்த்தல் போன்றவற்றால் மூல நோய் உருவாக காரணமாக உள்ளது என்றும் இந்த நோய் ஏற்படாமல் வழிவகை செய்யும் உணவுப் பழக்கங்களை பொருத்தவரைக்கும் கீரை, தண்ணீர் உள்ளிட்ட நார்ச்சத்து பொருட்கள் அடங்கிய உணவுகளை அதிகம் உட்கொள்ள வேண்டும். இதேபோன்று மலமிருந்து சுத்தப்படுத்தும் பொழுதும் விவசாயிகள் வயல்வெளிகளில் தங்களை சுத்தப்படுத்தும் பொழுது மண் கலந்த தண்ணீரில் அவர்கள் பயன்படுத்தும் போது இது போன்ற பிரச்சனைக்கு ஆளாகிறார்கள். அதிக வெப்பம் இந்த நோய்க்கு ஒரு முக்கிய காரணமாகிறது எனவே உணவு பழக்க வழக்கங்களை முறைப்படுத்தினால் இந்த நோயிலிருந்து காப்பாற்றப்படலாம் என்றும் அவர் தெரிவித்தார்
பாத்ரூமில் அதிக நேரம் அமர்ந்திருந்து செல்போன் பார்ப்பதால் மூல நோய் ஏற்படும் அபாயம்

Leave a comment