பரமக்குடி,அக்.2: பரமக்குடி ஊராட்சி ஒன்றியத்தின் சார்பில் ஆர். எஸ். அரசு மேல்நிலைப்பள்ளி விளையாட்டு மைதானத்தில் தூய்மை சேவை -2024 விழிப்புணர்வு மினி மாரத்தான் போட்டி நடைபெற்றது இதற்கு பரமக்குடி ஊராட்சி ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலர் பிரியதர்ஷினி தலைமை வகித்தார். துணை வட்டார வளர்ச்சி அலுவலர் இளங்கோவன் முன்னிலை வைத்தார். பரமக்குடி வட்டார ஒருங்கிணைப்பாளர் தினகரன் அனைவரையும் வரவேற்றர், போட்டியினை
பரமக்குடி சார் ஆட்சியர் அபிலாச கவுர் கொடி அசைத்து துவக்கி வைத்தார். போட்டியில் 200க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர். போட்டியில் வெற்றி பெற்ற மாணவ மாணவிகள் தலா 10 நபர்களுக்கு ரொக்கப் பரிசு, சான்றிதழ், மற்றும் கேடயம் வழங்கப்பட்டது, போட்டியில் கலந்து கொண்டவர்களுக்கும், மாரத்தான் போட்டியை நடத்திய உடற்கல்வி இயக்குநர்கள், உடற்கல்வி ஆசிரியர்ககளுக்கு பாராட்டு சான்றிதழ்கள் வழங்கப்பட்டது, விழிப்புணர்வு மாரத்தான் போட்டி நடைபெறுவதையொட்டி தூய்மையை சேவை குறித்த சுகாதார உறுதிமொழி எடுக்கப்பட்டது, தூய்மை சேவை செல்பி பாய்ண்ட் அமைக்கப்பட்டு அனைவரும் புகைப்படம் எடுத்துக் கொண்டனர். அனைவருக்கும் மஞ்சள் பை வழங்கப்பட்டது.
இந்த விழிப்புணர்வு மாரத்தான் நிகழ்ச்சியில் போட்டி ஒருங்கிணைப்பாளர் உடற்கல்வி இயக்குநர் இராஜா, மாவட்ட ஒருங்கிணைப்பாளர் நவநீதன், பரமக்குடி அரசு கலைக்கல்லூரி உடற்கல்வி இயக்குனர் பிரசாத், சேதுபதி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் சகாயராஜ், உடற்கல்வி இயக்குநர்கள் ராஜா, நாகசாமி , அன்சாரி, உடற்கல்வி ஆசிரியர் சுதர்சன்,நகர மன்ற உறுப்பினர் பாக்கியம்,தமிழ்நாடு கபாடி கழக துணை செயலாளர் ராஜா
மற்றும் மாவட்ட ஊராக வளர்ச்சி முகமை டி. பி. எம் வல்லுநர்கள், பரமக்குடி ஊராட்சி ஒன்றிய அலுவலர்கள், ஈப்பு ஓட்டுனர்கள், ஊராட்சி செயலர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
பரமக்குடியில் தூய்மை பாரத இயக்கம் சார்பாக தூய்மையே சேவை 2024 விழிப்புணர்வு மராத்தான் போட்டியினை சார் ஆட்சியர் அபிலாச கவுர் கொடி அசைத்து துவக்கி வைத்தார்