கன்னியாகுமரி மே 7
கன்னியாகுமரி மாவட்டம் கடியப்பட்டணம் கல்லடிவிளை, சிவந்த மண் பகுதியில் உள்ள நேதாஜி ஸ்போர்ட்ஸ் கிளப் சார்பில் மாநில அளவிலான பகல் இரவு கைப்பந்தாட்ட போட்டி நடைபெற்றது.
இந்த போட்டிகளை துவக்கி வைக்க வருகை தந்த
கன்னியாகுமரி பாராளுமன்ற உறுப்பினர் விஜய் வசந்த்-க்கு நேதாஜி ஸ்போர்ட்ஸ் கிளப் நிர்வாகிகள் மற்றும் ஊர் பொது மக்கள் சால்வை அணிவித்து உற்சாக வரவேற்பு அளித்தனர். மேலும் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு முதல் பரிசு ரூ 10000 மற்றும் போட்டி நடத்துவதற்கு ரூ 5000 வழங்கிய விஜய வசந்த் எம் பி க்கு நிகழ்ச்சியில் நன்றி தெரிவித்தனர்.
பின்னர் இரு அணி வீரர்களை அறிமுகம் செய்து வைக்கப்பட்டது. அவர்களுக்கு கை குலுக்கி வாழ்த்துக்கள் தெரிவித்து போட்டிகளை துவக்கி வைத்தார்.
முன்னதாக அங்குள்ள ஆற்றுமாடன் தம்புரான் கோயிலில் சாமி தரிசனம் செய்தார். அங்கு உள்ள கலையரங்கத்திற்கு மேல்கூரை அமைத்து தர வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர்.
இந்த நிகழ்ச்சியில் வெள்ளிமலை பேரூராட்சி காங்கிரஸ் தலைவர் தயனேஷ் உட்பட நேதாஜி ஸ்போர்ட்ஸ் கிளப் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.