பொள்ளாச்சி மே 14
பொள்ளாச்சி நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் இளைஞர் பேரவை சார்பில் சர்வதேச செவிலியர் தினத்தை கொண்டாடும் விதமாக பொள்ளாச்சி மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் செவிலியர் தின விழா கொண்டாடப்பட்டது.
நிகழ்ச்சிக்கு நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் இளைஞர் பேரவை தலைவர் வெள்ளை நடராஜ் தலைமை தாங்கினார்.
மருத்துவமனை மருத்துவர்கள் டாக்டர் சரவண குமார் டாக்டர் ஜோதி கலா டாக்டர் மணிமேகலை டாக்டர் கார்த்திகேயன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இதைத்தொடர்ந்து மருத்துவமனை செவிலிய கண்காணிப்பாளர் கௌரி அனைவரையும் வரவேற்றுப் பேசினார்.
இந்த நிகழ்ச்சியில் அனைத்து செவிலியர்களுக்கும் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் இளைஞர் பேரவை சார்பில் மாலை அணிவித்தும் பொன்னாடை அணிவித்தும் கேக் வெட்டியும் புத்தகப் பரிசு வழங்கியும் வாழ்த்துக்களை பரிமாறி கொண்டாடப்பட்டது. நிகழ்ச்சியில் கவிஞர் .பொள்ளாச்சி முருகானந்தம் நகர மன்ற உறுப்பினர் எம் .கே .சாந்தலிங்கம் ஆகியோர் வாழ்த்தி பேசினர் இதைத் தொடர்ந்து மருத்துவமனையில் பணிபுரியும் அனைத்து செவிலியர்களும் செவிலியர் தின உறுதி மொழியை எடுத்துக் கொண்டனர். இந்நிகழ்ச்சியில் மருத்துவமனை செவிலிய கண்காணிப்பாளர் பொன்னிஸ்வரி செவிலியர்கள் கலைச்செல்வி திலகமணி சண்முகப்பிரியா மற்றும்
சுப்பிரமணியம் குப்புசாமி மற்றும் மருத்துவமனை ஊழியர்கள் கலந்து கொண்டனர்.