மதுரை மே 2,
மதுரை பெரியார் பேருந்து நிலையத்தில் தமிழ்நாடு அரசு போக்குவரத்துக்கழகத்தின் சார்பில் மே 1 உழைப்பாளர் தினத்தை முன்னிட்டு மேலாண் இயக்குனர் ஆ.ஆறுமுகம் தலைமையில் ஒட்டுனர் மற்றும் நடத்துனர் முன்னிலையில் கேக் வெட்டி கொண்டாடப்பட்டது. மதுரை , திண்டுக்கல், விருதுநகர், தேனி மாவட்டங்களில் சிறப்பாக அதிகபடியான நாட்கள் பணிபுரிந்த ஒட்டுனர், நடத்துனர், தொழிலாளர்களுக்கு நற்சான்றிதழ் மற்றும் பரிசுகள் வழங்கப்பட்டது இந்த நிகழ்வில் பொது மேலாளர்கள் சமுத்திரம், ராகவன் மற்றும் போக்குவரத்து கழகபணியாளர்கள் , அலுவலர்கள் கலந்து கொண்டனர்.