நிலக்கோட்டை மே.03:
திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டையில் வட்டார வழக்கறிஞர்கள் சங்கம் சார்பில் மூத்த வழக்கறிஞர்கள் ஓய்வு பெற்ற வழக்கறிஞர்கள் மற்றும் இளம் வழக்கறிஞர்களை பாராட்டி நினைவுப் பரிசு வழங்கும் விழா நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு சங்கதலைவர் இளங்கோ தலைமை வகித்தார் கொளரவதலைவர் கருப்பையா செயலாளர் கோகுல்நாத் ஆகியோர் முன்னிலை வகித்தனர் பொருளாலர் வேந்தன் வரவேற்றார் நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்ட பாண்டிச்சேரி முன்னாள் தலைமை நீதிபதி கிருஷ்ணராஜா நிலக்கோட்டை அரசு வழக்கறிஞர் கார்த்திகா பிரியதர்ஷினி மூத்த வழக்கறிஞரும் திமுக ஒன்றிய செயலாளருமான மணிகண்டன் ஆகியோர் கலந்து கொண்டு பல மூத்த இளம் வழக்கறிஞர்களுக்கு நினைவு பரிசுகள் கேடயங்கள் வழங்கி வாழ்த்தி கௌரவித்தனர், இந்நிகழ்ச்சியில் துணைச் செயலாளர் ராஜா உதயகுமார் புரட்சிமணி உட்பட வழக்கறிஞர்கள் அனைவரும் குடும்பத்துடன் கலந்து கொண்டு கயிறு இழுத்தல் மியூசிக்கல் சேர் உள்ளிட்ட விளையாட்டு போட்டி உட்பட பல்வேறு கலைநிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு சிறப்பித்தனர். விழா நிறைவின் போது துணைத் தலைவர் சங்கர் நன்றி கூறினார்.