நாகர்கோவில் மே 15
ஏஜேஎம் பவுண்டேசன் மற்றும் வேணாடு ஹெல்த்கேர் சேரிட்டபிள் டிரஸ்ட் இணைந்து மாதந்தோறும் பொதுமக்கள் பயன்பெறும் வகையில் இலவச மருத்துவமுகாம் நடத்தி வருகிறது. மே மாதத்திற்கான இலவச மருத்துவமுகாம் கன்னியாகுமரி மாவட்டம் தோவாளை தாலுகாவில் அழகியபாண்டியபுரம் அருகில் உள்ள வடக்கு பேயோடு ஊரில் இரட்சணியசேனை ஆலய வளாகத்தில் சிறப்பாக நடைபெற்றது. இம்மருத்துவமுகாமிற்கு ஏஜேஎம் பவுண்டேசன் ஒருங்கிணைப்பாளர் ஜெகநாதன் மற்றும் வேணாடு ஹெல்த்கேர் சேரிட்டபிள் டிரஸ்ட் நிறுவனர் பிரவீன்ராஜன் ஆகியோர் தலைமை வகித்தனர். இந்த மருத்துவமுகாமில் கண் மருத்துவம், பொது மருத்துவம், மகளிர் மற்றும் குழந்தைகளுக்கான மருத்துவ ஆலோசனைகள் மற்றும் மருந்துகளும் இலவசமாக வழங்கப்பட்டன. மேலும் நீரிழிவு பரிசோதனைகள், இரத்த அழுத்தம், நுரையீரல், இதய பரிசோதனைகளுக்கான சிகிச்சைகளும் மேற்கொள்ளப்பட்டன. பெஜான்சிங் கண் மருத்துவமனை, பென்சாம் மருத்துவமனை, டேவிட் பல் மருத்துவமனை மருத்துவர்கள் முகாமில் கலந்து கொண்ட பொதுமக்களுக்கு சிகிச்சைகள் அளித்தனர். சுமார் 100 க்கும் மேற்பட்ட பொதுமக்கள் இந்த மருத்துவ முகாமில் கலந்து கொண்டு பயன்பெற்றனர். இந்நிகழ்வில் ஹரிகரசெல்வன், ஜான், பெஞ்சமின், ரூபன், சந்தானம் உட்பட பல நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.