நாகர்கோவில் – மே – 10,
குமரி மாவட்டம் நாகர்கோவில் மாநகராட்சி பொறியாளரால் 11 கோடி நிதி இழப்பு ஏற்பட்டுள்ளதாகவும் இவர் மீது தணிக்கை துறை நடவடிக்கை எடுக்க கேட்டு நாம் தமிழர் கட்சியினர் மாவட்ட ஆட்சியரை சந்தித்து மனு ஒன்றை அளித்தனர். அந்த மனுவில் கூறியிருப்பதாவது :-
நாகர்கோவில் மாநகராட்சியில் கடந்த 2017 ஆம் ஆண்டு முதல் மாநகர பொறியாளராக பாலசுப்ரமணியம் பணியாற்றி வருகிறார் . இந்த மே மாதம் 31ஆம் தேதியுடன் ஓய்வு பெறுகிறார் . அவர் நாகர்கோவில் மாநகராட்சியில் பணியாற்றி சுமார் 11 கோடியளவில் நிதி இழப்பு ஏற்படுத்தி இருப்பதாக தணிக்கை துறை மூலம் தடை எழுப்பப்பட்டுள்ளது. அதற்கான ஆவணம் இத்துடன் இணைக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் அவருடைய பணி ஓய்வுக்கு தடையாக இருப்பதால் நாகர்கோவில் மாநகராட்சி அலுவலர்கள் மூலம் நிவர்த்தி செய்யும் செயலை செய்து வருகிறார் . இயல்பான நடவடிக்கையாக இருந்தாலும் இதன் மீது பல சந்தேகங்கள் எழுந்து உள்ளன . ஏனெனில் 2017 ஆண்டில் எழுப்பப்பட்ட தடை ஆனைகள் கூட இன்று வரை நிவர்த்தி செய்யப்படவில்லை. தற்போது பணி ஓய்வுக்காக நிவர்த்தி செய்வது போல் உள்ளது.
மேலும் நாகர்கோவில் மாநகராட்சி அலுவலகமானது பாலசுப்ரமணியதிற்க்கு முழு உடைந்தையாகவே இருக்கிறது இதற்குக் காரணம் கடந்த குடியரசு தினம் அன்று நாகர்கோவில் மாநகராட்சியின் பரிந்துரையின் அடிப்படையில் மாவட்ட ஆட்சியாளர் மூலம் சிறந்த பணியாளருக்கான விருது அவருக்கு வழங்கப்பட்டது. இவ்வளவு தணிக்கை தடை இருந்தும் அதை வழங்குவதற்கு பரிந்துரை இருப்பது இவர்களின் உள்நோக்கம் என்ன என்பதை அறிந்து கொள்ள முடிகிறது. ஒவ்வொரு தணிக்கை துறையும் எழுப்பும் கேள்விகளுக்கு காரணங்களை வழங்க வேண்டியது அரசு ஊழியரின் கடமை ஆனால் அந்த காரணங்கள் விதிமுறைகளுக்கு உட்பட்டு மட்டுமே இருக்க வேண்டும் விதிமுறைகளுக்கு அப்பாற்பட்டு தணிக்கை துறை அதிகாரிகள் அந்த காரணங்களை ஏற்று தணிக்கை தடைகளை நீக்கினால் நாகர்கோவில் மாநகராட்சி சுமார் 11 கோடி அளவில் இவரால் மட்டுமே நிதி இழப்பை சந்திக்க கூடும்.
இவைகளை தணிக்கை துறை அதிகாரிகள் கருத்தில் கொண்டு ஒரு தனி அரசு ஊழியர்களுக்காக ஒட்டு மொத்த அலுவலகமும் மக்களுக்கான சேவை செய்ய தவறுவது மிகவும் வெட்கக்கேடானது. எனவே மாநகராட்சி நிர்வாக துறையின் சட்ட திட்டங்களுக்கு உட்பட்டு தணிக்கை துறையின் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கன்னியாகுமரி நாம் தமிழர் கட்சி சார்பாக மாவட்ட ஆட்சியாரிடம் மனு அளிக்கப்பட்டது இதில் நாகர்கோவில் வடக்கு தொகுதி தலைவர் தனுஷ்குமார் , துணை தலைவர் ஆறுமுகம், இணைச் செயலாளர் சொக்கலிங்கம் , மேற்கு தொகுதி தலைவர் ஜாண், மேற்கு தொகுதி இணை செயலாளர் ஷாஜி, சுரதீஸ், செய்தி தொடர்பாளர் நாகராஜன் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.