கன்னியாகுமரி மே 6
தேங்காய்பட்டணம் கடற்கரையில் நின்று கொண்டிருந்தபோது ராட்சத அலையில் சிக்கி குழந்தை மாயம். குமரி மாவட்டம் தேங்காய்பட்டணத்தில் கடற்கரையில் நின்றிருந்த தந்தை, மகள் அலையில் சிக்கி இழுத்துச் செல்லப்பட்டனர். இவருவரும் ராட்சத அலையில் இழுத்துச் செல்லப்பட்ட நிலையில், மக்கள் தந்தை பிரேமதாஸ்யை மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர். மேலும், கடலில் மாயமான அவரது 7 வயது மகள் ஆதிஷாவை தேடும் பணி தீவிரமாக நடைபெறுகிறது. கடலோரப் பகுதிகளில் கடல் சீற்றம், கடல் கொந்தளிப்பு அதிகமாக இருக்கும் என தேசிய பேரிடர் மேலாண்மை ஆராய்ச்சி மையம் ஏற்கனவே அறிவிப்பு வெளியிட்ட இருந்த நிலையில் கன்னியாகுமரி மாவட்டத்திற்கு ரெட் அலர்ட் அறிவிப்பை மாவட்ட ஆட்சியர் ஸ்ரீதர் வெளியிட்டுள்ளார் இந்த நிலையில் அரபிக் கடல் பகுதிகளில் பலத்த கடல் சீற்றமும் கொந்தளிப்பும் ஏற்பட்டுள்ளது. கடற்கரை கிராமத்தில் நேற்று இரவு முதல் தொடர்ந்து கடல் சீற்றம் இருந்து வருவதால் கடற்கரையை ஒட்டி உள்ள கிராமங்களில் ஊருக்குள் கடல் நீர் வந்த வண்ணம் உள்ளது. இதனை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த பிரேமதாஸ் என்பவர் தனது 7 வயது மகள் ஆதிஷா ஆகிய இருவரும் ராட்சத அலையில் சிக்கினர். ராட்சத அலையில் இழுத்துச் செல்லப்பட்ட சிறுமி ஆதிஷாவை மீனவர்கள் உதவியுடன் போலீசார் தேடி வருகின்றனர்.