கன்னியாகுமரி மாவட்டம் தென்தாமரைகுளத்தில் தாமரை கைப்பந்து கழகத்தின் சார்பில் பள்ளி மாணவர்களுக்கான கோடைக் கால வாலிபால் பயிற்சி கடந்த 15 நாட்களாக தென் தாமரைக்குளம் எல்எம்எஸ் மேல்நிலைப்பள்ளி மைதானத்தில் காலை மற்றும் மாலையில் நடந்தது.நூற்றுக்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்து கொண்ட இந்த பயிற்சி முகாம் நிறைவு விழா நேற்று மாலை நடந்தது.அதனைத் தொடர்ந்து 17-வயதுக்கு உட்பட்ட மாணவர்களுக்கிடையே நடைபெற்ற மாநில அளவிலான வாலிபால் போட்டியை திமுக வர்த்தகர் அணியின் இணைச்செயலாளரும் தலைமை செயற்குழு உறுப்பினருமான வழக்கறிஞர் என்.தாமரைபாரதி துவக்கி வைத்து வாழ்த்துக்கள் தெரிவித்தார்.
தென்தாமரைகுளத்தில் பள்ளி மாணவர்களுக்கான கோடைக் கால வாலிபால் பயிற்சி
Leave a comment