தென்காசி வடக்கு மாவட்ட திமுக இளைஞரணி சார்பில சங்கரன்கோவிலில் மக்களை தேடி சென்று நீர் மோர் எலுமிச்சை சாறு பழங்கள் வழங்கும் நிகழ்ச்சி தென்காசி வடக்கு மாவட்ட செயலாளர் ராஜா எம்எல்ஏ அறிவுறுத்தலின் படி, இரண்டாம் நாளாக அரசு மருத்துவமனை முன்பாக தென்காசி வடக்கு மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் சரவணன் ஏற்பாட்டில் நீர்மோர், சர்பத்,தண்ணீர் பழங்கள், வழங்கப்பட்டன. நிகழ்வில் தலைமை நகரமன்ற தலைவர் உமா மகேஸ்வரி மதிமுக ஆறுமுகச்சாமி அவர்கள்,மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர்கள் ராயல் கார்த்தி, ராஜராஜன், ராஜ்,அன்சாரி, காவல் கிளி, கழக உடன்பிறப்புகள்,மற்றும் பலர் கலந்து கொண்டனர்.