இராமநாதபுரம் மே 05-
ராமநாதபுரம் அருகே உள்ள தேர்போகி கிராமத்தில் ஊருக்கு எதிராக ஒரே பெயரில் கட்டப்பட்ட கோவில்: கோவிலில் திருவிழா நடத்தினால் சட்ட ஒழுங்கு ஏற்படும் எனக் கூறி உடனடியாக தடுத்து நிறுத்த வேண்டும் என வலியுறுத்தி மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் புகார் அளித்த கிராம மக்கள்
இராமநாதபுரம் அருகே உள்ள தேர்போகி கிராமத்தில் 150 குடும்பங்கள் இருந்து வருவதாகவும் இந்த நிலையில் இவர்களுக்கு சொந்தமாக சுடலைமாடசாமி என்ற ஆலயம் ஒன்று அமைத்து காலங்காலமாக வழிபட்டு வந்துள்ளனர்
இந்த சூழ்நிலையில் அங்கு பூசாரியாக இருந்தவரை பணி நீக்கம் செய்ததை தொடர்ந்து அவர் கிராமத்திற்கு எதிராக தனியாக ஊருக்கு வெளியே இந்தக் கோயில் போன்று சிலைகள் அமைத்து கோவில் கட்டி கும்பாபிஷேகம் நடத்த சென்றதாகவும் அதனை கிராம மக்கள் தடுத்து நிறுத்தியதால் இருதரப்புக்கும் இடையே தகராறு ஏற்பட்டு தற்போது வழக்கு நிலுவையில் உள்ள நிலையில் மீண்டும் அந்த கோவிலில் வருகிற 10-ம் தேதி திருவிழா நடத்த திட்டமிட்டு இருப்பதாகவும் இந்த திருவிழா நடந்தால் இரு தரப்புக்கும் இடையே சட்ட ஒழுங்கு பிரச்சனை ஏற்படும் என கூறி தேர்போகி கிராமத்தைச் சேர்ந்த தலைவர் தலைமையில் பெண்கள் உட்பட 100-க்கும் மேற்பட்டோர் மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் வழக்கு நிலுவையில் இருக்கும் பொழுது திருவிழா நடத்துவதை தடுத்து நிறுத்தி சட்ட ஒழுங்கு பிரச்சினை வருவதை தடுக்க வேண்டும் என கூறி மனு அளித்தனர்
..