வேலூர் மாவட்டம், காட்பாடி சந்திப்பு ரயில் நிலையத்துக்கு அதிகாலை 5.10 மணிக்கு வரவேண்டிய திருவனந்தபுரம் சென்ட்ரல் அதிவிரைவு ரயில் 2 மணி நேரம் காலதாமதமாக காட்பாடிக்கு வந்தது. இதனால் காட்பாடியிலிருந்து சென்னைக்கு பல்வேறு பணிகளுக்கு செல்பவர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டனர். ரயில் பயணிகளும் தவியாய் தவிக்க ஆரம்பித்து விட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால் காலதாமதத்திற்கு உண்டான காரணத்தை ரயில்வே நிர்வாகம் கடைசி வரை தெரிவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் திருவனந்தபுரத்துக்கு அடுத்து வந்த மங்களூர் அதிவிரைவு ரயில் மற்றும் ஏலகிரி விரைவு ரயில் உள்ளிட்ட ரயில்களில் பயணம் செய்ய வேண்டிய பயணிகள் கூட திருவனந்தபுரம் சென்ட்ரல் அதிவிரைவு ரயிலில் காலை 6.50 மணிக்கு சென்னை சென்ட்ரல் செல்ல புறப்பட்டுச் சென்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. இதனால் அந்த ரயில் பயணிகள் கூட்டத்தால் நிரம்பி வழிந்தது என்பது குறிப்பிடத்தக்கது.