திருப்பூர் மே 2,
திருப்பூர் வாவிபாளையம் பேருந்து நிலையம் அருகே தமிழகத்தில் முதல் முறையாக திருநங்கைகள் சார்பில் பொதுமக்களுக்கு நீர்மோர் வழங்கும் நிகழ்ச்சி வெகு சிறப்பாக திருப்பூர் வடக்கு சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட வாவிபாளையம் பேருந்து நிலையம் அருகே நடைபெற்றது.
இந்த விழாவினை திருப்பூர் தெற்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் க.செல்வராஜ், மேயர் தினேஷ் குமார் ஆகியோர் துவக்கி வைத்து. பொதுமக்களுக்கு நீர் மோர் தர்பூசணி வெள்ளரி போன்றவைகளை வழங்கினார்கள். இந்த விழாவினை திருநங்கைகள் தலைவி திவ்யா மற்றும் திருப்பூர் ஒருங்கிணைந்த திருநங்கைகள் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது இந்த விழாவில் திமுக சார்பில் தெற்கு மாநகர செயலாளர் டி கேடி மு நாகராஜ் பகுதி செயலாளர் ஜோதி. உசேன் பகுதி இளைஞரணி அமைப்பாளர் ராஜ் உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் பங்கேற்றனர்.