சிவகங்கை; மே 04,
சிவகங்கை மாவட்டம் திருப்புவனத்தில் கோயில்களுக்கு நேற்றிக் கடனுக்காக விடப்பட்ட மாடுகள் அதிகம் உலாவுகின்றது இந்த மாடுகள் அரசு மருத்துவமனை பகுதிகளிலும் மற்றும் அரசு அலுவலகங்களிலும் மற்றும் ரோடு தெருக்கள் அனைத்திலும் சுற்றித் திரிவதால் இங்குள்ள மக்கள் மிகவும் பயத்திலேயே உள்ளனர். மேலும் இந்த மாடுகள் பல இடங்களில் ஒன்றுடன் ஒன்று சண்டையிட்டுக் கொள்வதால் அங்கு இருக்கக்கூடிய கடைகள் மற்றும் இருசக்கர வாகனங்கள் பாதிக்கப்படுகின்றது.
இந்த நிலையில் பள்ளி மாணவ மாணவிகள் ரோட்டில் வந்து பேருந்துக்காக காத்திருக்கவே பயப்படுகின்றனர் இந்த மாடுகள் சண்டையிட்டுக் கொள்வதால் அந்த வழியாக செல்லக்கூடிய இருசக்கர வாகன ஓட்டிகள் பயந்து பல இடங்களில் விபத்துகளில் சிக்கி காயமடைகின்றன இதற்கு உடனடியாக மாவட்ட நிர்வாகமும் பேரூராட்சி நிர்வாகமும் நடவடிக்கை எடுத்து மக்களை காப்பாற்ற வேண்டும் என்று பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.