சங்கரன்கோவில். மே:6
சங்கரன்கோவிலில் தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் அறிவுறுத்தலின்படி கோடை கால வெப்பத்தில் இருந்து பொதுமக்களை பாதுகாக்கும் வகையில் மக்களைத் தேடி வாகனம் மூலம் நீர், மோர் , ஜுஸ், பழங்கள் வழங்குவதற்கான துவக்கி வைக்கும். நிகழ்ச்சி நடந்தது. நிகழ்ச்சிக்கு வடக்கு மாவட்ட செயலாளர் ராஜா எம்எல்ஏ தலைமை வகித்தார் . தலைமை செயற்குழு உறுப்பினர்கள் யூஎஸ்டி சீனிவாசன், பரமகுரு, மாநில மருத்துவர் அணி இணைச் செயலாளர் டாக்டர் செண்பக விநாயகம், தென்காசி நாடாளுமன்ற தொகுதி திமுக வேட்பாளர் டாக்டர் ராணி ஸ்ரீ குமார் முன்னிலை யில். நீர் மோர் பழங்கள் வழங்கும் வாகனத்தின் வாயிலாக வருவாய் மற்றும் பேரிடர் மீட்பு துறை அமைச்சர் கே கே எஸ் எஸ் ஆர் ராமச்சந்திரன் கலந்து கொண்டு நடமாடும் நீர், மோர் பந்தலை திறந்து வைத்தார். நடமாடும் வாகனம் மூலம் மக்கள் அதிகமாக கூடும் பகுதிகளில் கோடை வெப்பத்தை தணிக்கும் வகையில் நீர் மோர் ,பழங்கள் ,இளநீர் ,நுங்கு ஆகியன பொதுமக்களுக்கு அமைச்சர் கே கே எஸ் எஸ் ஆர் ராமச்சந்திரன் தன் திருக்கரங்களால் வழங்கி துவக்கி வைத்தார் . நிகழ்ச்சியில் மாவட்ட அவைத் தலைவர் பத்மநாதன் மாவட்ட பொருளாளர் சரவணன், மாவட்டத் துணைச் செயலாளர்கள் மனோகரன் ராஜதுரை புனிதா, ஒன்றிய செயலாளர்கள் லாலாசங்கரபாண்டியன், கடற்கரை, பெரியதுரை, பொன்முத்தையாபாண்டியன், பூசைத்துரை , சேர்மத்துரை, வெள்ளத்துரை, கிறிஸ்டோபர், பால்ராஜ், ராமச்சந்திரன் , அன்பழகன், நகரச் செயலாளர்கள் சங்கரன்கோவில் பிரகாஷ், புளியங்குடி அந்தோணிசாமி, பேரூர் கழக செயலாளர்கள் ரூபி பாலசுப்ரமணியன் ,மாரிமுத்து, குருசாமி, சேது சுப்பிரமணியன் பொதுக்குழு உறுப்பினர்கள் மாரிச்சாமி ,தேவா என்ற தேவதாஸ், வேலுச்சாமிபாண்டியன், மகேஸ்வரி,நகராட்சி சேர்மன்கள் சங்கரன்கோவில் உமா மகேஸ்வரி, புளியங்குடி விஜயா, அறங்காவலர் குழு தலைவர் வக்கீல் சண்முகையா, மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் முகேஷ், மாவட்ட மாணவர் அணி அமைப்பாளர் உதயகுமார், மின்வாரிய தொமுச திட்டச் செயலாளர் மகாராஜன், தொமுச மண்டல அமைப்பு செயலாளர் மைக்கேல் நெல்சன், மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர்கள் ராஜ், ராயல் கார்த்தி, ராஜராஜன், அன்சாரி, மணிகண்டன் , தகவல் தொழில்நுட்ப பிரிவு ஜலால், வீரமணி, வக்கீல்கள் கண்ணன், அன்புச்செல்வன் மற்றும் மாவட்ட , ஒன்றிய, நகர,பேரூர் மற்றும் வார்டு சார்பு அணி பொறுப்பாளர்கள் உறுப்பினர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர், ஏற்பாடுகளை இளைஞரணி சார்பில் மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் ஆர் சரவணன் சிறப்பாக செய்திருந்தார்.