மே:13
திருப்பூர் மாவட்டம் அரிமா சங்கத்தில் நடைபெற்றது. அனைத்து தர மக்களுக்கும் தன்னுடைய அலுவலகப் பணி தொய்வில்லாமல் தினம்தோறும் நேரங்கள் காலம் பார்க்காமல் அனைத்து பணிகளையும் பொதுமக்களுக்காக செய்த கிராம நிர்வாக அலுவலர் விஜயராஜ்VAO பணி நிறைவு விழா திருப்பூர் மாவட்டத்தில் நடைபெற்றது. 5.4.1964. ஆண்டு பிறந்த இவர் முதல் பணியை 1984 ஆம் ஆண்டு அக்டோபர் ஐந்தாம் தேதி தன்னுடைய முதல் பணியை ராணுவத்தில் மருத்துவத்துறை பணியில் சேர்ந்தார் 2001 ஆம் ஆண்டு ராணுவத்தில் பணி ஓய்வு பெற்று திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் படை கல துப்பாக்கி தொழிற்சாலையில் பணியில் சேர்ந்து 2003 -2008ஆம் வருடம் வரை பணியில் இருந்தார். பிறகு 16 வருடம் கிராம நிர்வாக அலுவலர் பணியை தமிழ்நாட்டில் தொடங்கினார். முதல் பணியாக அவிநாசி புதுப்பாளையம் பகுதியில் தொடங்கி இன்று வரை திருப்பூர் மாவட்டம் பல்வேறு இடங்களில் கிராம நிர்வாக அதிகாரியாக பணி செய்து வந்தார் இறுதியாக பல்லடம் தாலுகா கணபதிபாளையம் பகுதியில் உள்ள கிராம நிர்வாக அலுவலகத்தில் டிசம்பர் ஒன்றாம் தேதியில் இருந்து ஐந்து மாதங்களாக பணியை மேற்கொண்டார். பணி நிறைவு விழாவில் பல்லடம் வட்டாட்சியாளர் ஜீவா முன்னிலை வகித்தார் தமிழ்நாடு கிராம அலுவலர் முன்னேற்ற சங்கம் முன்னாள் மாநில தலைவர் பழனிச்சாமி தலைமையில் பணி நிறைவு விழா நடைபெற்றது.
திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை வட்டத்தில் பணிபுரிந்து மறைந்த கிராம நிர்வாக அலுவலர் கருப்புசாமி அவர்களின் குடும்பத்திற்கு தமிழ்நாடு முழுவதும் உள்ள கிராம நிர்வாக அலுவலர்கள் மூலமாக நிதி திரட்டப்பட்டு ரூபாய் 260959/-ஐ கருப்புசாமி அவர்களின் தாயார் வள்ளிநாயகம் அவர்களின் வங்கி கணக்கில் ஃபிக்சட் டெபாசிட் காசோலையாக வழங்கப்பட்டது
இந்நிகழ்வில் கலந்து கொண்ட திருப்பூர் மாவட்ட கிராம நிர்வாக அலுவலர்கள் கோயம்புத்தூர் மாவட்ட கிராம அலுவலர்கள் மற்றும் தமிழ்நாட்டின் ஏனைய மாவட்டத்தில் இருந்து வந்த கிராம நிர்வாக அலுவலர்கள் மற்றும் எந்தவித எதிர்பார்ப்பு இன்றி பங்களிப்பு செய்த கிராம நிர்வாக அலுவலர்கள் அனைவருக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்.