திருப்பத்தூர்:மே,1,திருப்பத்தூர் மாவட்டம் தருமபுரி மேம்பாலத்தின் கீழ் தனியார் பேருந்து மற்றும் ஈச்சர் லாரி நேருக்கு நேர் மோதியதில் பதினைந்துக்கும் மேற்பட்டோருக்கு பலத்த காயம் ஏற்பட்டது.

தர்மபுரி மாவட்டத்தை சேர்ந்த தேவராஜ் மற்றும் அவருடைய மகன் சபரி ஆகியோர் காஞ்சிபுரத்துக்கு வைக்கோல் ஏற்ற தர்மபுரியில் இருந்து வந்துள்ளதாக தெரிகிறது.
அப்போது திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் அடுத்த ஹவுசிங் போர்டு பகுதியில் உள்ள தர்மபுரி மேம்பாலம் கீழ் வந்து கொண்டிருந்தபோது,அதேபோல திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் பேருந்து நிலையத்திலிருந்து NNB என்ற தனியார் பேருந்தில் சுமார் 15-க்கும் மேற்பட்ட பயணிகள் தர்மபுரி சென்று கொண்டிருந்தனர்.அப்போது தர்மபுரி மேம்பாலத்தின் கீழ் செல்லும்பொழுது திடீரென ஈச்சர் லாரியும் பேருந்தும் நேருக்கு நேர் மோதிக்கொண்டன.
இந்த நிலையில் இந்த பேருந்தில் பயணம் செய்த சபரி, தேவராஜ், கணேசன், ஜமுனா, நாகராஜ், நவாப், சாகித், சக்கரை, பவானி, தாமோதரன்,வள்ளி, உள்ளிட்ட 15 க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர்.இந்த நிலையில் அக்கம் பக்கத்தினர் கொடுத்த தகவலின் பெயரில் 108 ஆம்புலன்ஸ் மூலம் திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.மேலும் திருப்பத்தூர் அரசு மருத்துவமனையில் 15க்கும் மேற்பட்டோர் சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும் இந்த சம்பவ குறித்து கந்திலி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.