தஞ்சாவூர் மே 16
தஞ்சாவூர் ரயில் நிலையத்தில் விழிப்புணர்வு ஊர்வலம் நடைபெற்றது.
பெண்கள் மற்றும் குழந்தைகளு க்கு எதிரான குற்றங்கள் போதை பொருள்கள் தடுப்பு , ரயில் பயண ங்களில் பாதுகாப்பு விழிப்புணர்வு ஊர்வலம் ரயில் நிலையத்தில் உள்ள அனைத்து நடை மேடைகள் வழியாக சென்று 1வது நடைமேடை யில் நிறைவடைந்தது .இதற்கு ரயில்வே போலீஸ் இன்ஸ்பெக்டர் சாந்தி ரயில்வே பாதுகாப்பு படை போலீஸ் இன்ஸ்பெக்டர் ஸ்ரீதர் ஆகியோர் தலைமை தாங்கினார்.
பின்னர் தஞ்சைக்கு வந்த திருச்சி மயிலாடுதுறை மன்னார்குடி மானாமதுரை, திருச்சி – காரைக்கா ல்,மயிலாடுதுறை – திருச்சி ஆகிய ரயில்களில் சென்ற பயணிகளிடம் நடைமேடையில் நின்று கொண்டி ருந்த பயணிகள் என அனைவருக் கும் ஒலி பெருக்கி மூலம் விழிப்பு ணர்வு ஏற்படுத்தப்பட்டது .இதில் ரயில் தண்டவாளத்தை கடக்கும் போது கவனமாக செல்ல வேண்டும் படியில் பயணம் செய்யக்கூடாது, செல்போன் பேசிக்கொண்டு ரயிலி ல் ஏறுவது மற்றும் இறங்குவதை தவிர்க்க வேண்டும் குழந்தைகளை ரயில்வே பாதையில் விளையாடு வதை அனுமதிக்க கூடாது. ஓடும் ரயிலில் இறங்கவோ ஏறவோ கூடாது என்று விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது .தொடர்ந்து பயணிகளுக்கு விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களும் வினியோகி க்கப்பட்டது .
இந்த நிகழ்ச்சியில் போலீஸ் சப் இன்ஸ்பெக்டர்கள் பாஸ்கரன் சீனிவாசன் தனி பிரிவு சிறப்பு சப் இன்ஸ்பெக்டர் சுரேஷ் மற்றும் போலீசார் என்சிசி மாணவர்கள் தூய்மை பணியாளர்கள் பேரிடர் மேலாண்மை பணியாளர்கள் பலர் கலந்து கொண்டனர்.
தஞ்சாவூர் ரயில்வே நிலையத்தில் பயணங்களில் பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு ஊர்வலம் !!

Leave a comment