தஞ்சாவூர் தமிழ் பல்கலைக்கழகம் ஒரத்தநாடு கால்நடை மருத்துவம் மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்து கொண்டுள்ளது.
தமிழ் பல்கலைக்கழக அறிவியல் புலத்தின் கீழ் இயங்கும் தொழில் – நில அறிவியல் துறை, சித்த மருத்துவ துறை சுற்றுச்சூழல் – மூலிகை அறிவியல் துறை ஆகிய மூன்று துறைகளுடன் ஒரத்தநாடு அரசு கால்நடை மருத்துவம் மற்றும் ஆராய்ச்சி நிறுவனம், ஒரத்தநாடு கால்நடை மருத்துவம் மற்றும் அறிவியல் பல்கலைக்கழகம் இணைந்து புரிந்துணவு ஒப்பந்தம் மேற்கொண்டது
இதன் மூலம் கல்லூரி மாணவ மாணவிகளின் திறனை மேம்படுத் தும் வகையில் பயிற்சிகள் வழங்க ப்படுகிறது மேலும் சித்த மருத்துவ ம் ,சுற்றுச்சூழல் மற்றும் மூலிகை அறிவியல் துறை சார்ந்த ஆய்வுகள் போன்றவற்றில் மாணவர்களுக்கு பயிற்சி அளிக்கப்படுகிறது. மேலும் ஆய்வகவசதிகள் கொண்டு பல்வே று சோதனைகளும் மேற்கொள்ளப் படுகிறது.
தமிழ் பல்கலைக்கழகம் இரு நிறுவனங்களிலும் உள்ள நிபுணத் துவத்தை பயன்படுத்தி பரஸ்பர நலன்களின் அடிப்படையில் பயிற்சிகள் குறுகிய கால படிப்புகள் கருத்தரங்குகள் பட்டறைகள் அல்லது மாநாடுகள் போன்ற கூட்டு க்கல்வியை நடவடிக்கைகளை மேற்கொள்ளுதல் தொடர்பாக புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள் ளப்பட்டது ஒப்பந்தத்தில் தமிழ் பல்கலைக்கழக துணை வேந்தர் திருவள்ளுவன் முன்னிலையில் பதிவாளர் தியாகராஜன் கையொப்பமிட்டார். அப்போது ஒரத்தநாடு அரசு கால்நடை மருத்துவம் மற்றும் ஆராய்ச்சி நிறுவன புலத்தலைவர் நர்மதா ,பேராசிரியர் ரங்கநாதன், தமிழ் பல்கலைக்கழக அறிவியல் புலத் தலைவர் நீலகண்டன் சித்த மருத்துவத்துறை தலைவர் பேராசி ரியர் பாரத ஜோதி சுற்றுச்சூழல் மற்றும் மூலிகை அறிவியல் துறை தலைவர் இணை பேராசிரியர் கவிதா கண்காணிப்பாளர் கார்த்திகேயன் ஆகியோர் உடன் இருந்தனர்.