இந்தியன் ரெட்கிராஸ் சொசைட்டி தஞ்சாவூர் மாவட்ட கிளையின் சார்பில் உலக ரெட்கிராஸ் தினத்தை முன்னிட்டு மாவட்ட அலுவலகத்தில் நிறுவனர் . ஜீன் ஹென்றி டுனாண்ட் திருஉருவப்படத்திற்கு மலர் அஞ்சலி செலுத்தப்பட்டது. தொடர்ந்து ரெட்கிராஸ் நோக்கங்கள் மற்றும் செயல்பாடுகள் குறித்த வினா விடை போட்டி நடைபெற்று அதில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன
நிகழ்வில் இந்தியன் ரெட்கிராஸ் சொசைட்டி மாவட்ட சேர்மன் டாக்டர். வரதராஜன், பொருளாளர் சேக் நாசர், யூத் ரெட்கிராஸ் ஆலோசகர் . ஜெயக்குமார், இரத்த வங்கி ஆலோசகர் அரிஸ்டோ வீரா, ரெட்கிராஸ் புரவலர்கள், வாழ்நாள் உறுப்பினர்கள், யூத் ரெட்கிராஸ் ஒருங்கிணைப்பாளர்கள், ஜூனியர் ரெட்கிராஸ் ஒருங்கிணைப்பாளர் கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்
நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை ஜூனியர் ரெட்கிராஸ் ஆலோசகர் முனைவர். பிரகதீஷ், அலுவலக மேலாளர் திரு. கலைச்செல்வன் ஆகியோர் செய்து இருந்தனர்.