நாகர்கோவில் மே 7
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் நான்கு வழி சாலையில் வடசேரி ஆரம்ப சுகாதார நிலையத்தில் பணியாற்றும் அரசு ஊழியர் நாதன் ஜெயக்குமார் என்பவரது மோட்டார் சைக்கிளில் மீது டாரஸ் லாரி மோதி விபத்து – நாதம் ஜெயகுமார் சம்பவ இடத்திலேயே பலி அப்பகுதியில் உள்ள பொதுமக்கள் டாரஸ் லாரியை சிறைப்பிடித்து போராட்டம். சம்பவ இடத்திற்கு வந்த போலீசாருடன் பொதுமக்கள் வாக்குவாதம் பரபரப்பு.
குமரி மாவட்டத்தில் இருந்து கேரளாவிற்கு கனிம வளங்கள் கொண்டு செல்லப்பட்டு வருகிறது. இதற்காக தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து தினசரி 500க்கும் மேற்பட்ட டாரஸ் லாரிகள் மூலம் நாகர்கோவில் வழியாக கனிம வளங்கள் தினந்தோறும் கொண்டு செல்லப்பட்டு வருகிறது. இந்த டாரஸ் லாரிகள் நகரப் பகுதிகளில் வரும்போது அதிக வேகத்துடன் வருவதால் குமரி மாவட்டத்தில் இதுவரை இரண்டு மாதங்களில் 10 க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். கடந்த சில நாட்களுக்கு முன்பு திருவட்டார் பகுதியில் டாரஸ் லாரி மோதி அந்த வழியாக இருசக்கர வாகனத்தில் வந்த பெண் ஒருவர் பலியானார்.
இதேபோன்று நாகர்கோவில் அடுத்துள்ள சுங்கான்கடையிலும் தொடர்ந்து நான்கு பேர் பலியாகி உள்ளனர். இருந்தாலும் இதனைகட்டுப்படுத்த முடியவில்லை இந்த நிலையில் நெல்லை மாவட்டத்தில் இருந்து பைபாஸ் வழியாக நாகர்கோவிலை அடுத்துள்ள புத்தேரி பகுதிக்கு லாரி வரும் பொழுது வடசேரி ஆரம்ப சுகாதார நிலையத்தில் பணியாற்றும் நாதன் ஜெயக்குமார் என்பவர் பணி முடிந்து இருசக்கர வாகனதில் வந்து கொண்டிருக்கும்போது அவர் வாகனத்தின் மீது டார்ஸ் லாரி மோதி சம்பவ இடத்திலேயே அவர் பலியானார் அப்பகுதி மக்கள் டாரஸ் லாரியை சிறை பிடித்து போராட்டத்தில் ஈடுபட்டு விடுவதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.