நாகர்கோவில், மே – 13
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் டாக்டர் ஜெயசேகரன் மெடிக்கல் டிரஸ்ட் சார்பில் ACRSI தென்மண்டல சந்திப்பு 2024 கருத்தரங்கு நாகர்கோவிலில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் வைத்து நடைபெற்றது. இது ப்ரோக்டாலஜி நிபுணர்கள் மற்றும் சுகாதார நிபுணர்களின் முதன்மையான கூட்டமாகும், இந்நிகழ்வு நோயாளியின் விளைவுகளை மேம்படுத்துவதற்கான அறுவை சிகிச்சை நுட்பங்களை மேம்படுத்துவதற்க்கும், ப்ரோக்டாலஜி துறையை முன்னேற்றுவதற்கும் ஒரு முக்கிய சந்தர்ப்பமாக அமையும் என்றும், “மாஸ்டரிங் ப்ராக்டாலஜி டெக்னிக்ஸ்” என்ற கருப்பொருளில் இந்த கருத்தரங்கு மே 11, 12, தேதியில் ஆகிய தேதிகளில் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. டாக்டர் ஜெயசேகரன் மருத்துவ அறக்கட்டளை, சுகாதாரப் பராமரிப்பில சிறந்து விளங்குவதற்கான அர்பணிப்புக்காகப் புகழ்பெற்றது பயிற்சியாளர்களுக்குத் தேவையான திறன்களை மேம்படுத்துவதை நோக்கமாக கொண்ட ஒரு ஆற்றல் மிக்க திட்டத்தை தொடுத்துள்ளது.
ப்ரோக்டாலஜி நிலப்பரப்பு தொடர்ந்து உருவாகி வருவதால் டாக்டர். ஜெயசேகரன் மருத்துவ அறக்கட்டளை இந்த துறையில் முன்னேற்றம் மற்றும் நோயாளிகளுக்கு விதிவிலக்கான கவனிப்பை வழங்குவதற்குத் தேவையான கருவிகளுடன் பயிற்சியாளர்களை சித்தப்படுத்துவதில் உறுதியாக உள்ளது. ப்ராக்டாலஜி நுட்பங்களில் தேர்ச்சி பெறவும், அறுவை சிகிச்சையின் எதிர்காலத்தை வடிவமைக்கவும் இந்தியாவிலிருந்து அதிக மருத்துவ வல்லுநர்கள் இந்த அற்புதமான கருத்தரங்கு கூடியியுள்ளதாகவும் கூறினர். இந்த கருத்தரங்கில் கலந்து கொண்ட காமென்வெல்த் மருத்துவ சங்க செயலாளர் மருத்துவர் ஜெயலால், மருத்துவர் ஸ்காட், மூல பெளத்திரம் நோய் குறித்து கூறியதாவது:-
இது பரம்பரை வியாதி இல்லை, இதை எளிதில் தடுக்கலாம் அதற்க்கு முக்கியம் முறையான உணவு பழக்கவழக்கங்கள் நிறைய குடிநீர் அருந்த வேண்டும், கீரை வகைகள் , நார் சத்து உணவு வகைகள் அதிகம் உன்ன வேண்டும், துரித உணவங்களில் தயாரிக்கப்படும் உணவுகளை வாங்கி உண்பது. கழிப்பறையில் அதிக நேரம் அமர்ந்து கொண்டு புத்தகங்கள் வாசிப்பது, புகைபிடிப்பது, செல்போன் உபயோகிப்பது , முறையாக உடலில் உள்ள கழிவுகளை வெளியேற்றாமல் இருப்பது, மலம் கழித்தவுடன் சோப்பினால் ஆசானவாயை சுத்தம் செய்யாமல் இருப்பது, அசுத்தமான நீரினால் சுத்தம் செய்வது போன்ற பழக்க வழக்கங்களால் இந்நோய் அதிகம் ஏற்ப்பட வாய்ப்புள்ளதாகவும் கூறினார் . இம்மாநாட்டில் தலைசிறந்த மருத்துவர்கள் தேவபிரசாத் ஜெயசேகரன், சாபுஜெயசேகரன், கனகவேல், ராஜபாண்டியன், நித்திலா, பால வித்யாசாகர், பிரதீப் சர்மா , பாபு, செபஸ்டின் வர்கீஸ், ஜெயலால், ஸ்காட் , ஜாஸ்பல்சிங் டிகோலா, ராஜேஷ் சுக்லா, முகமது இஸ்மாயில், ராஜசேகர், கண்ணன் மற்றும் மருத்துவர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர் இந்த கருத்தரங்கில் மருத்துவ உபகரணங்கள் கண்காட்சியில் இடம்பெற்று இருந்தன.