அரியலூர்,மே:02
அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் நகராட்சி சார்பில், பொதுமக்களுக்கு ஓ ஆர் எஸ் கரைசல் (Oral Re-hydration Salts (உப்பு-சர்க்கரை கரைசல்) ) வழங்கும் முகாம் நேற்று தொடங்கியது. கோடை வெயிலின் தாக்கத்தினால் ஏற்படும் வெப்ப அலைகளில் இருந்து பொதுமக்களை காக்கும் வகையில் தமிழக முழுவதும் ஓஆர்எஸ் கரைசல் வழங்கும் முகாம் நடைபெற்று வருகிறது. அந்த வகையில், ஜெயங்கொண்டம் நகராட்சி அலுவலகம் மற்றும் ஜெயங்கொண்டம் பேருந்து நிலையம் ஆகிய 2 இடங்களில் ஓஆர்எஸ் கரைசல் வழங்கும் முகாம் நேற்று தொடங்கியது.
முகாமை நகராட்சி ஆணையர் அசோக்குமார் தொடங்கி வைத்தார். நகர்புற ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவ அலுவலர் அசோக்குமார் முன்னிலை வசித்தார். நகராட்சி மேலாளர் அன்புச்செல்வி, நகராட்சி பொறியாளர் ராஜகோபாலன், வட்டார சுகாதார மேற்பார்வையாளர் ராஜ்குமார், துப்புரவு ஆய்வாளர் மணிவண்ணன், களப்பணி உதவியாளர் விஜயகுமார், சுகாதார ஆய்வாளர் ஜிஜின் உட்பட பலம் கலந்து கொண்டனர். தினந்தோறும் மேற்கண்ட 2 இடங்களிலும் ஓஆர்எஸ் வழங்கப்படுகிறது.
அரியலூர் மாவட்ட செய்தியாளர் வினோத்குமார்.