கிருஷ்ணகிரி,மே.19-
கிருஷ்ணகிரி மாவட்டம் ஜெகதேவி கிராமத்தை சேர்ந்தவர் கோபிநாத் கிரிஜா இவரது மகள்கள் பவ்யா பத்தாம் வகுப்பு பொது தேர்வில் 496 மதிப்பெண்கள் பெற்று கிருஷ்ணகிரி மாவட்டத்தில் மூன்றாம் இடம் பிடித்துள்ளார். இதேபோல் பவித்தா 490 மதிப்பெண்கள் பெற்றுள்ளார். மாணவிகள் பவ்யா பவித்தா இவர்கள் பர்கூர் சட்டமன்ற உறுப்பினர் தே. மதியழகன் எம் எல் ஏ வை நேரில் சந்தித்து பொன்னாடை போர்த்தி இனிப்புகள் வழங்கி வாழ்த்து பெற்றனர். இதைத்தொடர்ந்து மதியழகன் எம்எல்ஏ மாணவிகளை பாராட்டி இனிப்பு வழங்கினார். தலைமை செயற்குழு உறுப்பினர் ஜெ.கே.கிருபாகரன், பெற்றோர் ஆசிரியர் சங்கத் தலைவர் நெடுஞ்செழியன் மற்றும் பெற்றோர்கள் உடன் இருந்தனர்.
ஜெகதேவி கிராமத்தைச் சேர்ந்த மாணவி பவ்யா கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 3-ஆம் இடம் பிடித்து சாதனை
Leave a comment