சிவகங்கை, மே 11,
சோழபுரம் ஸ்ரீ ரமண விகாஸ் மேல்நிலைப்பள்ளி மார்ச் 2024 அரசு பொதுத்தேர்வில் பத்தாம் வகுப்பு மாணவர்கள் சாதனை :
சிவகங்கை மாவட்டம் சோழபுரம் ஸ்ரீ ரமண விகாஸ் மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் 2024 அரசு பொதுத்தேர்வில் பத்தாம் வகுப்பு மாணவர்கள் சாதனை அந்த வகையில் மாணவி பா.நேகா ஸ்ரீ 500 க்கு 487 மதிப்பெண்கள் பெற்று முதலிடமும் மாணவி பா.பொன் கமல் சுபாஷினி 500 க்கு 479 மதிப்பெண்கள் பெற்று இரண்டாமிடமும் மாணவர் செ. மகரிஷி ரோஹித் மற்றும் மாணவி ர.ரீனா ஆகியோர் 500 க்கு 476 மதிப்பெண்கள் பெற்று மூன்றாம் இடமும் பெற்று சாதனை படைத்துள்ளனர்.
இதில் மாணவர் செ. மகரிஷி ரோஹித் கணிதம் மற்றும் சமூக அறிவியல் பாடங்களில் 100 க்கு 100 மதிப்பெண்கள் பெற்றுள்ளார். மாணவர் ரா. ஜெயராமன் மற்றும் ஜெ.சபரி வித்யா ஆகியோர் 500 க்கு 474 மதிப்பெண்கள் பெற்று நான்காமிடம் பெற்றுள்ளார் .
இதில் மாணவர் ரா.ஜெயராமன் கணிதம் மற்றும் சமூக அறிவியல் பாடங்களில் 100 க்கு 100 மதிப்பெண் பெற்றுள்ளார் . மேலும் கணித பாடத்தில் நான்கு மாணவர்களும் சமூக அறிவியல் பாடத்தில் இரண்டு மாணவர்களும் 100 க்கு 100 மதிப்பெண் பெற்றுள்ளனர்.
470 மதிப்பெண்களுக்கு மேல் 7 மாணவர்களும், 450 மதிப்பெண்களுக்கு மேல் 17 மாணவர்களும், 400 மதிப்பெண்களுக்கு மேல் 47 மாணவர்களும் மதிப்பெண் பெற்று சாதனை படைத்துள்ளனர்.
இந்த வெற்றிக்கு பெரிதும் பாடுபட்டு மாணவர்கள் துணை நின்று ஊக்கப்படுத்திய ஆசிரியர்கள் மற்றும் ஒத்துழைப்பு வழங்கிய பெற்றோர்கள் அனைவருக்கும் பள்ளி நிர்வாகத்தின் சார்பில் பள்ளி தாளாளர் முத்து கண்ணன் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.