சென்னை, மே. 12-
தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜிகே வாசன் எம்பி வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில் கூறியிருப்பதாவது. உலகம் முழவதும் மே 12-ஆம் தேதி உலக செவிலியர் தினமாக கொண்டாடப்படுகிறது. செவிலியர்களின் தன்னலம் இல்லா பொதுநலத் தொண்டிற்கு நன்றி தெரிவிக்கும் விதமாக இந்நாள் கொண்டாடப்படுவது வாழ்த்துக்குரியது.
செவிலியர்கள் நோயாளிகளின் உடல் நலன் மட்டுமல்லாமல் அவர்களின் மனநலனிலும் அக்கரையோடு பணியாற்றி அவர்களை காப்பாற்றுகிறார்கள். அதோடு அர்ப்பணிப்பு உணர்வோடும் தங்களின் கனிவான பேச்சாலும் அரவணைப்பாலும் தொடர் கண்காணிப்பாலும் நோயாளிகள் குணமடைய பணியாற்றுவது பாராட்டுக்குரியது.
இரவு பகல் பாராது பல்வேறு இயற்கை இடர்பாடுகளுக்கு இடையில் தொய்வில்லாமல் பணியாற்றும் செவிலியர்களின் தன்னலம் இல்லா பணி பாராட்டுக்குரியது. இந்நன்னாளில் செவிலியர்கள் அனைவருக்கும் தமிம் மாநில காங்கிரஸ் சார்பாக பாராட்டுக்களை தெரிவித்துக்கொள்கிறேன். என்று குறிப்பிட்டுள்ளார்.