நிலக்கோட்டை,மே.06:
திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டையை அடுத்த செம்பட்டியில் மாஸ்டர் கபாடி கிளப் மற்றும் ஊர் பொதுமக்கள் சார்பில் நடந்த முதலாமாண்டு மாநில அளவிலான கபடி போட்டியை திமுக நிலக்கோட்டை மேற்கு ஒன்றிய செயலாளர் கரிகாலபாண்டியன் துவக்கி வைத்து வாழ்த்தி முதல் பரிசான 30-ஆயிரம் ரூபாய் ரொக்கம் மற்றும் சிறப்பு பரிசுகளை வழங்கி வாழ்த்தினார் 60-கிலோ எடை பிரிவில் இரவு பகலாக மின்னொலியில் இரண்டு நாட்கள் நடைபெறும் இப்போட்டியில் திருச்சி தஞ்சை நெல்லை மதுரை கோவை தூத்துக்குடி விருதுநகர் மூணாறு உள்ளிட்ட பல்வேறு பகுதியிலிருந்து 80-க்கும் மேற்பட்ட அணிகள் கலந்து கொண்டனர் முதல் மூன்று இடங்களை பெறும் அணிக்கு தலா 30,000 முதல் 20,000,15,000 என பதினைந்து அணிகளுக்கு 2000 வரை பரிசுகள் மற்றும் நினைவு கோப்பைகள் வழங்கப்படவுள்ளது மேலும் இப்போட்டிகள் நடுவர்குழு தலைவர் சரவணன் அகில இந்திய நடுவர் சுப்பிரமணியன் தலைமையிலான பத்திற்கும் மேற்பட்ட நடுவர்கள் சிறப்பாக நடத்தினர் விழா ஏற்பாடுகளை மாஸ்டர் ஸ்போர்ட்ஸ் கிளப் குழுவினர் மற்றும் ஊர் பொதுமக்கள் சிறப்பாக செய்திருந்தனர்.