செந்துறை,மே:01
தமிழகத்தில் பல மாவட்டங்களில் வெப்பம் சதமடித்து மக்களை வாட்டி வதைக்கும் கோடை வெயிலை சாமாளிக்க திமுக சார்பில் ஆங்காங்கே கோடைகால நீர் மோர் பந்தல் திறக்கப்பட்டு வருகிறது.
அதன்படி அரியலூர் மாவட்டம் செந்துறை வடக்கு ஒன்றிய திமுக சார்பில் ஆர்.எஸ்.மாத்தூர் பேருந்து நிலையத்தில் கோடைகால தண்ணீர் பந்தல் திறப்பு விழா திமுக ஒன்றிய செயலாளர் எழில்மாறன் தலைமையில் நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் பொதுமக்கள்
வெயிலில் இருந்து பாதுகாத்து கொள்ள குளிர்ச்சி தரும் பழங்கள், தர்பூசணி, லெமன், நீர் மோர் மற்றும்
குளிர்பானங்களை பொதுமக்களுக்கு வழங்கினர். உடன் மாவட்ட வர்த்தக அணி தலைவர் சிவப்பிரகாசம், மாவட்ட சுற்றுசூழல் அணி துனை அமைப்பாளர் கோபி,
மாவட்ட பிரதிநிதி கோடி,
ஓன்றிய துனை செயலாளர் ஆசைதம்பி, மகளிர் அணி தலைவி சித்ரா, செந்துறை திமுக ஒன்றிய குழு உறுப்பினர் மணக்குடையான் தமிழ்மாறன் உட்பட பொருப்பாளர்கள் பலர் கலந்து கொண்டனர்.