செந்துறை, மே:04
அரியலூர் மாவட்டம் செந்துறை அருகே நல்லாம்பாளையம் கிராமத்தில் அம்மன் கோவில் தேர் திருவிழா சுற்று வட்டார கிராம மக்கள் கலந்து கொண்டு ஊர் மக்கள் தேரை வடம் பிடித்து இழுத்தனர்,முன்னதாக தேரில் அம்மன் சிலையை அமரவைத்து பூக்களால் அலங்கரிக்கப்பட்ட தேரில் அசைந்தபடி ஊர் மக்களுக்கும் பக்தர்களுக்கும் காட்சி அளித்தால். முன்னதாக கோவில் திருவிழா நடத்த ஊர் நாட்டார்கள் தலைமையில் பொதுமக்கள் முன்னிலையில் திருவிழா நடத்துவது என முடிவு செய்து காப்பு கட்டும் நிகழ்வு கடந்த ஏப்ரல் மாதம் 24 ஆம் தேதி கோவில் வளாகத்தில் முகூர்த்தக்கால் நடப்பட்டு பக்தர்கள் 18 நாட்கள் தங்கள் விருதத்தை தொடங்கினர். தொடர்ந்து 18 ஆம் நாள் நேற்று திருத்தேர் சீரமைத்து அலங்கரிக்கப்பட்டு தயார் நிலையில் இருந்த தேரில் அம்மனை அலங்கரித்து அமர வைத்து வானவேடிக்கை மேளதாளங்கள் முழங்க அரோகரா அரோகரா ,கோவிந்தா கோவிந்தா என்ற பக்தி முழக்கத்தோடு கோவில் பூசாரிகள் ஊர் நாட்டார்கள் தேர் புறப்படட்டும் என்ற சொல்லுக்கு ஏற்றவாறு தேர் தன் நிலையை விட்டு பக்தர்களின் இழு விசை கேட்ப நகர்ந்தது. தேரை பொதுமக்கள் பக்தர்கள் தேரில் கைற்றை வடம் பிடித்து இழுத்தனர் தேர் முக்கிய வீதிகள் வழியாக வலம் வந்து மீண்டும் கோவிலை வந்தடைந்தது, இததிருவிழாவில் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். இத் திருவிழாவில் பாதுகாப்பு ஏற்பாடுகளை இரும்புலிக்குறிச்சி காவல் துறை செய்திருந்தனர்.