சிவகங்கை, மே 11,
சிவகங்கையில் ஆக்ஸ்வர்ட் பதின்ம மேல்நிலைப்பள்ளி பத்தாம் வகுப்பு தேர்ச்சியில் அபார சாதனை.
சிவகங்கை, டி.புதூரில் செயல்பட்டு வரும் ஆக்ஸ்வர்ட் பதின்ம மேல்நிலைப் பள்ளியானது பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் அபார சாதனை படைத்துள்ளது. இந்தப் பள்ளியின் மாணவி வி.அஸ்வதி என்பவர் 500 க்கு 492 மதிப்பெண்களைப் பெற்று சாதனை படைத்துள்ளார். இதே மாணவி கணிதத்தில் 100 க்கு 100 மதிப்பெண்களையும் பெற்றுள்ளார்.
இதே பள்ளியில் பி. ஆர். மதிவதனி என்ற மாணவி 490 மதிப்பெண்களைப் பெற்று இரண்டாம் இடத்திற்கு வந்துள்ளார். மூன்றாம் இடத்தில் 489 மதிப்பெண்களை என்.சௌமியா, ஆர்.ஹரி நாக்சி, கே.சம்யுக்தா ஆகிய மூன்று மாணவிகள் ஒரே எண்ணிக்கையிலான மதிப்பெண்களைப் பெற்று சாதனை படைத்துள்ளனர்.
மேலும் தமிழ் பாடத்தில் 99 மதிப்பெண்களை மூன்று பேரும் ஆங்கிலத்தில் 99 மதிப்பெண்களை எட்டுப் பேரும் கணிதத்தில் 100 மதிப்பெண்களை ஒன்பது பேரும் அறிவியல் பாடத்தில் 98 மதிப்பெண்களை மூன்று பேரும் சமூக அறிவியல் பாடத்தில் 100 மதிப்பெண்களை மூன்று பேரும் பெற்று சாதனை படைத்திருக்கிறார்கள்.
இவ்வாறு அதிக மதிப்பெண்களைப் பெற காரணமாக இருந்த பள்ளி நிர்வாகத்தை சிவகங்கை மக்கள் வெகுவாக பாராட்டி வருகிறார்கள்.