நாகர்கோவில் – மே – 6
கன்னியாகுமரி மாவட்டம் மணவாளக்குறிச்சி கொல்லன்விளை பகுதியைச் சேர்ந்தவர் பூமதி (50) இவரது மகன் பிபின்ப்ரியன் (29) கடந்த எட்டு ஆண்டுகளுக்கு முன்பு கல்லூரியில் பயிலும் போது அழகிய மண்டபம் பிலங்காலை பகுதியைச் சேர்ந்த ஜெபப்ரியாவை பெண் வீட்டாரின் எதிர்ப்பையும் மீறி பூமதி சம்மதத்தின் பெயரில் இருவரும் திருமணம் முடிந்து பூமதி வீட்டில் சந்தோசமாக வாழ்ந்து வந்தனர் . அதன் விளைவாக இருவருக்கும் ஆத்விக் ப்ரியன் (04) என்ற மகனும் உள்ளார்.ஜெப பிரியா மணவாளக்குறிச்சியில் ஒரு தனியார் நிதி நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் கணவன் மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு கருத்து வேறுபாடு காரணமாக ஜெபப்ரியா கடந்த (2023) ஆண்டு தனது மகன் ஆத்விக் ப்ரியனை அழைத்துக் கொண்டு பிலங்காலையில் உள்ள தனது தாயார் வீட்டில் வாழ்ந்து வருவதாகவும் அவர் குடும்பத்தினருடன் பலமுறை சமாதானம் பேசியும் பிபினுடன் சேர்ந்து வாழ வரவில்லை எனவும் இந்நிலையில் கடந்த 27. 04. 2024 சனிக்கிழமை பிபின் ப்ரியன் தனது மகன் ஆத்விக் ப்ரியனை பார்ப்பதற்காக ஜெபப்பிரியாவின் தாயார் வீட்டிற்கு சென்றபோது ஜெபப்பிரியாவின் தாய் நிர்மலா (52) , ஸ்டீபன் ராஜ் (55) , செல்வின் (33), மேக்லின் (30) , பக்கத்து வீட்டுகாரர் ஜெயா (40) ப ஆகியோர் கூட்டாக ஒன்று சேர்ந்து உனது மகன் இங்கு இல்லை எனவும் வெளியே செல் என கூறியுள்ளனர் . ஆனால் வீட்டில் ஆத்விக்ப்ரியன் சத்தம் கேட்டதால் எனது மகனை பார்க்காமல் செல்ல மாட்டேன் என கூறியதால் பிபின் ப்ரியனை கொலை வெறி தாக்குதல் நடத்தி அவர்கள் வீட்டு ஜன்னல் கம்பியில் அவனை கயிரால் கட்டி வைத்து அவரது உடலில் , மற்றும் முதுகில், மூக்கில், கடித்து வலது கையில் அறிவாளால் வெட்டி கொலை வெறி தாக்குதல் ஈடுபட்டுள்ளனர். உடல் முழுவதும் ரத்த காயங்களுடன் உயிருக்கு போராடிய பிபின் ப்ரியனை அக்கம் பக்கத்தினர் மீட்டு திருவட்டார் காவல் நிலையத்துக்கு தகவல் அளித்ததின் அடிப்படையில் திருவட்டார் காவல் நிலைய போலீசார் சம்பவ இடம் வந்து பிபின் ப்ரியன் உடம்பில் உள்ள காயங்களை பார்த்து அதிர்ச்சி அடைந்து உடனே குளச்சல் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக செல்லும்படி அறிவுறித்தியதின் பேரில் மருத்துவ மனையில் சிகிச்சை பெற்று இந்நிலையில் மேல் சிகிச்சைக்காக ஆசாரிப்பள்ளம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருகிறார் இச்சம்பவம் குறித்து சமூக வலைதளங்களில் பிபின் ப்ரியன் உடல் முழுவதும் ரத்த காயங்களுடன் தனது மகனுடன் உரையாடும் வீடியோக்கள் வலம் வந்தன. அதனைத் தொடர்ந்து பிபின் தயார் பூமதி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுந்தர வதனத்திற்கு கொடுத்த புகாரின் அடிப்படையில், பிபின் ப்ரியனை கொலைவெறி தாக்குதல் நடத்திய ஜெபப் ப்ரியாவின் தந்தை ஸ்டீபன் ராஜ் (55) , தாயார் நிர்மலா (52), மைத்துனர்கள் செல்வின் (33), மேக்லின் (30), மற்றும் பக்கத்து வீட்டுக்காரர் ஜெயா (46) ஆகியோர் மீது திருவட்டார் காவல்துறையினர் U/S 147, 148, 341, 294(b) 323, 324, 342, 506 (ii) IPC பிரிவின் கீழ் வழக்குபதிவு செய்துள்ளனர்.