திருப்பூர் மாவட்டம் உடுமலையைச் சேர்ந்த 17 வயது சிறுமி தாத்தா பாட்டி வீட்டில் வசித்து வருகிறார். கடந்த சில நாட்களாக சிறுமியின் உடல் நிலையில் மாற்றம் ஏற்பட்டுள்ளது. இதை அடுத்து அவரை அங்குள்ள மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று மருத்துவ பரிசோதனை செய்தனர்.அப்போது சிறுமி 4 மாத கர்ப்பமாக இருப்பது தெரிய வந்தது. இதை அடுத்து சிறுமியை உறவினர்கள் விசாரித்த போது 3 சிறுவர்கள் உட்பட 9 பேர் அழைத்துச் சென்று பாலியல் துன்புறுத்தலில் ஈடுபட்டதாக கூறியு ள்ளார். இதை அடுத்து உடுமலைஅனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது.
இதன் பேரில் போலீசார் ஜெய காளீஸ்வரன்( 19) மதன்குமார் (19) பரணி குமார்( 21) பிரகாஷ் (24) நந்தகோபால்( 19 )பவா பாரதி (22) மற்றும், 14, 15. மற்றும் 16 வயது சிறுவர்கள் என மொத்தம் ஒன்பது பேர் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டனர்.