திண்டுக்கல் மே:15
எரியோடு அருகில் உள்ள தொட்டனம்பட்டி கே.எம். மருத்துவமனையில் ஏபிஜே. அப்துல் கலாம் சமூக நல அறக்கட்டளை மற்றும் சூர்யா பவுண்டேஷன் இணைந்து மருத்துவமனையில் செவிலியர் தின விழா கொண்டாடப்பட்டது.இந்நிகழ்ச்சிக்கு மருத்துவ கே.எம். மருத்துவமனை மருத்துவர் இஜாஸ் அகமது தலைமை தாங்கினார். சூர்யா பவுண்டேஷன் தலைவர் சதாசிவம் முன்னிலையில் வைத்தார். அப்துல் கலாம் அறக்கட்டளை பொருளாளர் சேவா ரத்னா முருகன் அனைவரையும் வரவேற்றார். சமூக சேவகர் டாக்டர். மருதைகலாம் நிகழ்ச்சியை சிறப்பாக தொகுத்து வழங்கினார்.
சிறப்பு அழைப்பாளராக சாம் திவாகர் , ஜி.டி .என். கல்லூரியின் பேராசிரியர் முனைவர் முருகானந்தம் ஆகியோர் கலந்து கொண்டனர்.செவிலியர்களுக்கு ,பொன்னாடை போர்த்தி பாராட்டு சான்றிதழ் , பழ மரக்கன்றுகள் வழங்கப்பட்டது. மருத்துவமனை வளாகத்தில் செவிலியர்கள் மரக்கன்றுகளை நட்டனர்.அப்துல் கலாம் அறக்கட்டளையின் நிர்வாகிகள் சந்தோஷ்குமார் ,முத்து கார்த்திக் ,பரத், கிஷோர் ஆகியோர் விழாவை சிறப்பாக ஏற்பாடு செய்து இருந்தனர். முடிவில் மருத்துவர் நசீர் நன்றி கூறினார்.