கீழக்கரை மே-1
மக்கள் நல பாதுகாப்பு கழக செயலாளர் முகைதீன் இப்ராகீம் மாவட்ட ஆட்சியர், திருப்புல்லாணி வட்டார வளர்ச்சி அலுவலர் ஆகியோருக்கு அனுப்பி உள்ள மனுவில் கூறியிருப்பதாவது,
இராமநாதபுரம் மாவட்டம் தில்லையேந்தல் பஞ்சாயத்திற்கு உள்பட்ட கீழக்கரை சரகம் துணைக் கண்காணிப்பாளர் அலுவலகம் முதல் பிரதான சாலையான கிழக்கு கடற்கரை சாலை வரை சில மீட்டர் இடைப்பட்ட சாலையில் கடந்த சில மாதங்களாக சாலை அமைப்பதாக சம்பந்தப்பட்ட துறையினர் அறிவித்து இன்று வரை அந்த சாலை நிறைவு பெறவில்லை.
இந்த சாலை வழியாக பிரதான கல்லூரிகள், பள்ளி கூடங்கள்,காவல் துறை துணை கண்காணிப்பு அலுவலகம்,B S N L அலுவலகம் மற்றும் கீழக்கரை நகருக்குள் வாகனங்கள்,பொதுமக்கள் செல்லும் மாற்றுப்பாதையாக இருக்கிறது.
எனவே! சமூகம் பொதுமக்கள் நலன் கருதி இந்த சாலையை உடனடியாக சீர் அமைக்க சம்பந்தப்பட்ட துறையினருக்கு உத்தரவு செய்யும் படி கேட்டுக்கொள்கிறோம். இவ்வாறு தனது மனுவில் கூறியுள்ளார்.