நாகர்கோவில், மே 04,
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் சரக்கல் விளை அருள்மிகு தேவி ஸ்ரீ பத்ரகாளி அம்மன் திருக்கோவிலில் ஆண்டுதோறும் சித்திரை பெருந் திருவிழா வெகு விமர்சையாக கொண்டாடபடுவது வழக்கம். அவ்வகையில் இந்த ஆண்டிற்க்கான சித்திரை பெருந்திருவிழாவின் முதல் நாளான நேற்று காலை ஐந்து மணிக்கு மங்கள மகா கணபதி ஹோமம், நவகிரக ஹோமம், லட்சுமி ஹோமம், பூர்ண தீபாரதனை, வேத பாராயணம், திருமூலர் பாராயணம், மகா அபிஷேகம், தீபாராதனை , கணபதி ஹோமம், மற்றும் காலை 8 மணிக்கு அம்பாளுக்கு சிறப்பு ஷோடாஷம் அபிஷேகம் தீபாராதனை சுசீந்திரம் சச்சிதானந்தம் போற்றி தலைமையில் நடைபெற்றது. காலை 10.30 மணிக்கு முன்னாள் இஸ்ரோ தலைவர் சிவன் தலைமையில் நம்பூதிரிகள் திருக் கொடியை ஏற்றி வைத்தனர்.மதியம் 12.15 மணிக்கு சிறப்பு அலங்கார தீபாரணையும் ஒரு மணிக்கு அன்னதானமும் ,மாலை ஆறு மணிக்கு திருவிளக்கு பூஜையும் எட்டு மணிக்கு சிறப்பு புஷ்பா அபிஷேகமும் 8. 15 மணிக்கு அம்பாளுக்கு சிறப்பு தீபாராதனையும் நடைபெற்றது இவ்விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.தேவி ஸ்ரீ பத்திரகாளி அம்மன் திருக்கோவில் சித்திரை பெருந்திருவிழா மே 3 முதல் 12 வரை தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டிருக்கும் எனவும் தினமும் அம்பாளுக்கு சிறப்பு பூஜைகளும் சிறப்பு அலங்கார தீபாரணைகளும் அபிஷேகங்களும் நடைபெறும். எட்டாம் திருவிழா அன்று மதியம் ஒரு மணிக்கு மாபெரும் அன்னதானமும் பத்தாம் திருவிழா மே மாதம் 12ஆம் தேதி அதிகாலை 3 மணிக்கு வில்லிசை பெரியம்மன் கதை, அலங்கார தீபாரதனை, பெரிய அம்மன் காட்சி தருதல் 12 மணிக்கு தீபாரதனை பன்னிரெண்டு முப்பது மணிக்கு அன்ன பிரசாதம் மாலை 6 மணிக்கு வானவில் அலங்காரத்துடன் தேவி ஸ்ரீ பத்ரகாளியாம்பிகா புஷ்ப அலங்காரத்தில் பல்லக்கு வாகனத்தில் எழுந்தருளிபவள மாலை அலங்காரத்துடன் முத்துக்கொடை அணிவகுப்பு நாதஸ்வர இசையுடன் உலக புகழ் கேரளா சிறப்பு சிங்காரி மேளம் மற்றும் வான வேடிக்கையுடன் அம்பாள் திருவீதி உலாவுடன் விழா நிறைவு பெறுகிறது.