கிருஷ்ணகிரி மாவட்ட காவல் கண்காணிப்பாளார் திரு. தங்கதுரை அவர்களின் உத்தரவின் பேரில் சட்டவிரோதாமான செயல்களலான, மது விற்பனை, கஞ்சா விற்பனை, லாட்டரி விற்பனை, மணல் கடத்தல், சூதாட்டம், குட்கா விற்பனை மற்றும் கடத்தலில் ஈடுப்படுபவர்கள், பாலியல் தொழிலில் ஈடுபடுபவர்கள் மீது சட்டப்படியான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
தடை செய்யப்பட்ட குட்கா பொருள்களை பதுக்கி வைத்திருப்பதாக கிடைத்த ரகசிய தகவலின் பேரில் காவேரிபட்டிணம் காவல் நிலைய சரகத்திற்குட்பட்ட காவேரிபட்டிணம் அகரம் ரோட்டில் அமைந்துள்ள தனலட்சுமி டிரேடர்ஸ் குடோனில் SI திரு. மோகன்ராஜ், மற்றும் HC 1025 திரு. சரவணன் ஆகியோர் சோதனை செய்த போது குடோனில் சட்டவிரோதமாக பதுக்கி வைத்திருந்த 300 கிலோ எடையுள்ள சுமார் ரூ.1,70,000/ மதிப்பிலான குட்கா பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டு குடோன் உரிமையாளர் காவேரிபட்டிணம், கோவிந்தசெட்டி தெருவை சேர்ந்த மகேந்திர குமார் சிங்(28), த/பெ. வள்ளராம் என்பவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு சிறைக்கு அனுப்பப்பட்டார். குடோனை சீல் வைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
மேலும் காவேரிபட்டிணம் காவல் நிலைய சரகத்திற்குட்பட்ட பென்னேஷ்வரமடம், தென்பென்னை ஆற்றுப்பகுதியில் சூதாட்டம் நடைபெறுவதாக கிடைத்த ரகசிய தகவலின் பேரில் கிருஷ்ணகிரி உட்கோட்ட காவல் துணை கண்காணிப்பாளார் திருமதி. தமிழரசி, அவர்கள் தலைமையில் சோதனை செய்த போது அங்கு சட்டவிரோதமாக பணம் வைத்து சூதாட்டம் விளையாடிய 1) கார்த்தி(36), த/பெ. கோவிந்தன், 2) வாசுதேவன்(52), த/பெ. சதாசிவம், 3). மணிகண்டன்(38), த/பெ. அரியப்பன், 4) வேல்முருகன்(45), த/பெ. ரங்கசாமி, 5) பிரகாஷ்(29), த/பெ. வேனு ஆகிய ஐந்து நபர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு அவர்களிடமிருந்து ரூ.20,500/- பறிமுதல் செய்யப்பட்டு சிறைக்கு அனுப்பப்பட்டனர்.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் யாருக்கேனும் கஞ்சா, குட்கா, லாட்டரி, அரசு மதுபானம், மணல் கடத்தல், பனங்கள் விற்பனை, விபச்சார தொழில் ஈடுபடுபவர்கள் பற்றி தகவல் தெரிய வந்தால் 24 மணி நேரமும் காவல் துறையினருக்கு 9498181214 என்ற தொலைபேசி எண் மூலமாக அல்லது வாட்ஸாப் மூலமாக தகவல் தெரிவிக்கலாம். மேற்படி சட்ட விரோதமான செயல்களில் ஈடுபடும் நபர்கள் மீது சட்ட ரீதியான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என தெரிவித்துக்கொள்ளப்படுகிறது.