கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட ஒட்டர் பாளையம் பாரதகோயில் அருகில் சட்ட விரோதமாக பணம் வைத்து பகடை விளையாடுவதாக கிடைத்த தவலின் அடிப்படையில் கிருஷ்ணகிரி மாவட்ட காவல் காவல் கண்காணிப்பாளர் .தங்கதுரை அவர்கள் உத்தரவிட்டதின் பேரில் சூளகிரி காவல் நிலைய காவல் ஆய்வாளர் . தேவி அவர்களின் தலைமையிலான தனிப்படையினர் மேற்கண்ட இடத்தில் சோதனை செய்ததில் முருகன் @ ஜோகி முருகன் (53) s/o கௌரப்பா, பாரதிதாசன் நகர், பாய்ச்சல் கிராமம், திருப்பத்தூர் மாவட்டம் என்பவர் சட்டவிரோதமாக பணம் வைத்து பகடை விளையாடி கொண்டுருந்தவர் கைது செய்யப்பட்டார். விசாரணையில் மேற்படி முருகன் @ ஜோகி முருகன் என்பவர் கோயில் திருவிழா நடைபெறும் இடங்களில் சட்டவிரோதமாக பகடை விளையாட்டை நடத்தி பொதுமக்களிடம் பணத்தை ஏமாற்றி வருவது தெரியவந்தது. மேற்படி நபர் நீதிமன்ற நடுவர் முன்பு ஆஜர் செய்யப்பட்டு ஓசூர் கிளை சிறையில் அடைக்கப்பட்டார்.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கஞ்சா, குட்கா, லாட்டரி, அரசு மதுபானம், மணல் கடத்தல், பனங்கள் விற்பனை, விபச்சார தொழில் ஈடுபடுபவர்கள் பற்றி தகவல் தெரிய வந்தால் 24 மணி நேரமும் காவல் துறையினருக்கு 9498181214 என்ற தொலைபேசி எண் மூலமாக அல்லது வாட்ஸாப் மூலம் தகவல் தெரிவிக்கலாம். மேற்படி சட்ட விரோதமான செயல்களில் ஈடுபடும் நபர்கள் மீது சட்ட ரீதியான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என தெரிவித்துக்கொள்ளப்படுகிறது.
சட்டத்துக்கு விரோதமாக பணம் வைத்து பகடை விளையாடியவர் கைது
Leave a comment