அரியலூர்,மே:16
அரியலூர் மாவட்டத்தையும், கடலூர் மாவட்டத்தையும் இணைக்கும் கோட்டைக்காடு – பெண்ணாடம் வெள்ளாறு மேம்பாலம் சுமார் ரூ 11.25 கோடியில் கட்டப்பட்டு, அணுகுசாலை போட சுமார் ரூ. 5.25 கோடியில் ஒப்பந்தம் விடப்பட்டு நாமக்கல்லை சார்ந்த ஒப்பந்ததாரர் டெண்டர் எடுத்து 2 ஆண்டுகளாக 20% பணிகூட நடைபெறவில்லை.
இந்த இணைப்பு சாலை அமைக்க வேண்டும் என கடந்த ஆண்டு ஆர் எஸ் மாத்தூரில் பேருந்து நிலையத்தில் தமிழ் பேரரசு கட்சி சார்பில் உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.
மேலும், இதுகுறித்து அரசின் கவனத்திற்கு கொண்டுசெல்ல அனைத்து தரப்பு சமூக ஆர்வலர்களும், அரசியல் கட்சிகளும் வரும் 18/05/2024 தேதி சனி கிழமை காலை 10:00 கோட்டைக்காடு வெள்ளாற்றில் நடைபெற உள்ள இக்கூட்டத்தில் கலந்துகொண்டு ஆலோசனை வழங்க கேட்டுகொள்கிறோம்.