தென்காசி வடக்கு மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் சரவணன் ஏற்பாட்டில் சங்கரன்கோவிலில் கோவில் வாசல் அருகே கோடை கால வெப்பத்தில் இருந்து பொதுமக்களை பாதுகாக்கும் வகையில் மக்களைத் தேடி வாகனம் மூலம் நீர், மோர் , ஜுஸ், பழங்கள் வழங்கும் வாகனத்தை வடக்கு மாவட்ட செயலாளர் ராஜா எம்எல்ஏ கலந்து கொண்டு துவக்கி வைத்தார். இந்த வாகனம் ஆனது மக்கள் அதிகம் கூடும் பகுதிகளான கோவில் வாசல், அரசு மருத்துவமனை பேருந்து நிலையம், பஸ் நிறுத்தங்கள் உள்ளிட்ட மக்கள் அதிகம் கூடும் பகுதிகளில் வெயிலால் வாடும் பொது மக்களை தேடிச் சென்று நீர், மோர் ,ஜூஸ், பழங்கள் வழங்குவதற்காக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த நிகழ்ச்சியில் தலைமை செயற்குழு உறுப்பினர் பரமகுரு, மாநில மருத்துவர் அணி இணைச் செயலாளர் டாக்டர் செண்பக விநாயகம், தென்காசி நாடாளுமன்ற தொகுதி திமுக வேட்பாளர் டாக்டர் ராணி ஸ்ரீ குமார், நகர செயலாளர் பிரகாஷ்,மாவட்ட துணைச் செயலாளர் புனிதா, நகராட்சி சேர்மன் உமா மகேஸ்வரி, பொதுக்குழு உறுப்பினர் மகேஸ்வரி, சேர்மன் பாலசுப்பிரமணியன்,மாணவரணி உதயகுமார், மாவட்ட இளைஞர் அணி துணை அமைப்பாளர்கள்ராயல் கார்த்தி, ராஜ் , ராஜராஜன், அன்சாரி, மணிகண்டன் ,தகவல் தொழில்நுட்ப அணி ஜலால், வீரமணிகண்டன், விவசாய அணி ஸ்ரீகுமார், மின்வாரிய தொமுச திட்டச் செயலாளர் மகாராஜன் , மற்றும் நகரதிமுக நிர்வாகிகள், வார்டு செயலாளர்கள், சார்பு அணி நிர்வாகிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
கோடை கால வெப்பத்தில் இருந்து பொதுமக்களை பாதுகாக்கும் வகையில் மக்களைத் தேடி வாகனம் மூலம் நீர், மோர் , ஜுஸ், பழங்கள் வழங்கும் வாகனம்
Leave a comment