கோடைகாலத்தில் பொது மக்களுக்கு குடிநீர் மின்சார விநியோகம் தங்கு தடை இன்றி கிடைக்க துறை சார்ந்த அலுவலர்களுடன் மாவட்ட ஆட்சியர் ஆலோசனை
ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சித் தலைவர் ச.வளர்மதி தலைமையில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள கூட்டரங்கில் மாவட்டத்தில் உள்ள அனைத்து பகுதிகளிலும் பொது மக்களுக்கு தங்கு தடை இன்றி சீரான குடிநீர் மின்சாரம் விநியோகம் செய்வது குறித்து அந்தந்த துறை சார்ந்த அலுவலர்களிடம் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இந்த ஆலோசனை கூட்டத்தில் திட்ட இயக்குனர் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை அலுவலர் லோகநாயகி உதவி இயக்குனர் ஊராட்சிகள் சுதா மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் பலர் உடன் இருந்தனர்.