நிலக்கோட்டை, மே 11,
கொடைரோடு அருகே (காவியன்) தனியார் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவி மாநில அளவில் மூன்றாம் இடமும்,மாவட்ட அளவில் இரண்டாமிடமும் பிடித்து சாதனை.
திண்டுக்கல் மாவட்டம் சின்னாளபட்டியை அடுத்த பெருமாள் கோவில்பட்டி அருகேவுள்ள அமலிநகரைச் சேர்ந்தவர் கணேசன்-வாணி தம்பதியினர் பூர்வீக விவசாய குடும்பத்தைச் சேர்ந்த இவர்களுக்கு ஒரு மகன் மகள் உள்ளனர் மகள் ஜெய் தர்சித்தா அம்மையநாயக்கனூரில் உள்ள (காவியன்) தனியார் மெட்ரிக் மேல்நிலை பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வருகிறார்,
இந்நிலையில் தமிழக பள்ளி கல்வித் துறை சார்பில் நேற்று வெளியிட்ட பத்தாம் வகுப்பு பொது தேர்வில் மாணவி ஜெய் தர்சித்தா கணிதம் அறிவியல் சமூக அறிவியலில் என தலா 100×100 மதிப்பெண்களும் விதம் 497-மதிப்பெண்கள் பெற்று மாநில அளவில் மூன்றாம் இடமும் மாவட்ட அளவில் இரண்டாமிடமும் பிடித்து சாதனை படைத்துள்ளார்.இதையடுத்து பள்ளி முதல்வர் ரவியப்துல்லா ஜெசிமா உட்பட பள்ளி ஆசிரியர்கள் நிர்வாகத்தினர், அலுவலர்கள் பெற்றோர்கள் உட்பட பலரும் சாதனை படைத்த மாணவச் செல்வங்களுக்கு இனிப்புகள் வழங்கி வாழ்த்து தெரிவித்தனர்.