கிருஷ்ணகிரி, ஏப்.13
கிருஷ்ணகிரி மாவட்டம் கொடமாண்டப்பட்டி அரசு உயர்நிலைப்பள்ளியில் படித்த மாணவன் சி. அன்பரசு பள்ளியில் 448 மதிப்பெண்கள் பெற்று பள்ளியில் முதல் இடத்தை பிடித்துள்ளார்.மாணவன் பெற்ற மதிப்பெண்கள் விபரம்: தமிழ் 80, ஆங்கிலம் 90, கணிதம் 90, அறிவியல் 91, சமூக அறிவியல் 97, மொத்தம் பெற்ற மதிப்பெண்கள் 448 மதிப்பெண்கள் பெற்றுள்ளார். மாணவன் அன்பரசசை பள்ளி தலைமை ஆசிரியர் மாதயன் மாணவனை பாராட்டி இனிப்புகள் வழங்கினார். இதைத்தொடர்ந்து சக ஆசிரியர்களும் மற்றும் பெற்றோர்கள் பாராட்டி வாழ்த்து தெரிவித்தனர்.