நாகர்கோவில், மே 11,
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் அரசு உதவி பெறும் சிறுமலர் பெண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவி கைப்பேசி, தொலைக்காட்சி பயன்படுத்தாததால் 497 மதிப்பெண்கள் பெற்றுள்ளார். மாணவிக்கு தலைமை ஆசிரியர், ஆசிரியர்கள் பெற்றோர்கள் வாழ்த்து தெரிவித்தனர்.
தமிழ்நாட்டில் 10 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு முடிவுகள் வெளியாகியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்தில் 96.24% தேர்ச்சி விகிதம் பதிவாகி மாநில அளவில் 4வது இடம் பிடித்துள்ளது. இதில் மாணவர்கள் 94.28% பேர் தேர்ச்சி அடைந்துள்ளனர். மாணவியர் 98.14% தேர்ச்சி அடைந்துள்ளனர். இந்நிலையில் நாகர்கோவிலில் அரசு உதவி பெறும் பெண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவி டிஷ்னி 500 /497 மதிப்பெண்கள் பெற்றுள்ளார். பின்னர் மாணவி டிஷ்னி செய்தியாளர்களிடம் கூறும்போது, எனது தந்தை கடையில் வேலை பார்த்து கஷ்டப்பட்டு என்னை படிக்க வைத்ததாகாவும்.இந்த மதிப்பெண்கள் பெற்றதற்க்கு கடவுளுக்கு நன்றி தெரிவிப்பதாகவும், நான் நன்கு படிக்க உதவிய எனது பள்ளி தலைமை ஆசிரியர், ஆசிரியர்களுக்கு நன்றி தெரிவிப்பதாகவும், நான் கைப்பேசி மற்றும் தொலைக்காட்சி பார்ப்பது இல்லை. அதனால்தான் நன்கு படித்து இந்த மதிப்பெண்கள் பெற்றதாகவும். அடுத்து கணித அறிவியியல் படிக்க உள்ளதாகவும் கூறினார். மாணவி டிஷ்னிக்கு தலைமை ஆசிரியர், ஆசிரியர்கள் பெற்றோர்கள் வாழ்த்து தெரிவித்தனர்.