கேரளாவில் இருந்து மதுரை வரை நடந்து வந்த வாலாஜா வாலிபர் ரெயில் மூலம் காட்பாடி வந்த வாலிபரை காட்பாடி செஞ்சிலுவை சங்க நிர்வாகிகள் வரவேற்றனர். கையில் பணம் இல்லாததால் கேரள மாநிலத்தில் இருந்து மதுரை வரை நடந்து வந்த வாலிபர். மதுரையில் வலிப்பு நோய் ஏற்பட்டு மயங்கி விழுந்தார். அவருக்கு மதுரையில் சிகிச்சை அளிக்கப்பட்டு ரெயில் மூலம் காட்பாடி வந்தார். காட்பாடியில் அவரை செஞ்சிலுவை சங்க நிர்வாகிகள் வரவேற்று சொந்த ஊருக்கு அனுப்பி வைத்தனர். கேரளாவில் இருந்து மதுரைக்கு நடந்து வந்த வாலிபர் மதுரை மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தின் அருகே சுமார் 25 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவர் வலிப்பு நோயால் பாதிக்கப்பட்டு கேட்பாரற்று கிடந்தார். அவருக்கு மதுரை மாவட்ட செஞ்சிலுவை சங்கம் சார்பாக முதலுதவி அளிக்கப்பட்டு உணவு உடை உள்ளிட்டவை வழங்கப்பட்டது. பிறகு அவரை பற்றி விசாரிக்கும் போது அவர் ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கர் அடுத்த வஜனபள்ளி என்ற மலை கிராம பகுதியை சேர்ந்தவர் என தெரியவந்தது. மேலும் அவர் ஒரு மாற்று திறனாளி ஆவார். அவர் சிற்பம், ஓவியம் போன்ற பணிகளில் ஈடுபடுபவர் என்றும் தெரியவந்தது. அந்த வாலிபர் வேலை நிமித்தமாக கேரளா மாநிலம் சென்றுள்ளார். அங்கு வலிப்பு நோய் பிரச்சனை இருந்ததால் வேலையில் இருந்து துரத்தப்பட்டுள்ளார். கையில் பணம் இல்லாததால் கேரள மாநிலத்தில் இருந்து மதுரை வரை நடந்து வந்தததாக தகவல் தெரிவித்தார். ரெயில் மூலம் காட்பாடிக்கு அனுப்பி வைப்பு மேலும் தனது சொந்த ஊருக்கு செல்ல உதவிடுமாறு மதுரை மாவட்ட செஞ்சிலுவை சங்க நிர்வாகிகளிடம் கோரிக்கை வைத்தார். அதன் அடிப்படையில் நேற்று று காலை மதுரை ரெயில் நிலையத்திலிருந்து காட்பாடிக்கு ரெயில் மூலம் மதுரை நிர்வாகிகள் அனுப்பி வைத்தனர். இந்த தகவலை மதுரை செஞ்சிலுவை சங்க நிர்வாகிகள் காட்பாடி செஞ்சிலுவை சங்கத் தலைவர் செ. நா. ஜனார்த்தனனுக்கு தெரிவித்தனர். அதன் பேரில் அவர், துணை தலைவர் விஜயக்குமாரி பொருளாளர் பழனி ஆகியோர் நேற்றிரவு 8 மணிக்கு காட்பாடி ரெயில் நிலையம் சென்றனர். காட்பாடியில் வாலிபருக்கு வரவேற்பு அங்கு மும்பை எக்ஸ்பிரஸ் ரெயில் மூலம் வந்த கொடுத்தானி வயது (24)வாலிபரை வரவேற்றனர். பின்னர் அவருக்கு சிற்றுண்டி, பிஸ்கட் பாக்கெட்கள், குடிநீர் பாட்டில் ஆகியவற்றை வழங்கி வழிச்செலவுக்கும் பணம் கொடுத்து இராணிப்பேட்டை மாவட்ட ரெட்கிராஸ் செயலாளர் ரகுநாதன் அவர்களுக்கு தகவல் தெரிவித்து அவரை சொந்த ஊருக்கு (வஜனபள்ளி மலை கிராமம், சோளிங்கர் அருகே ஆந்திர மாநில எல்லையில் உள்ள) பேருந்து மூலம் அனுப்பி வைத்தனர்.
கேரளாவில் இருந்து மதுரை வரை நடந்து வந்த வாலாஜா வாலிபர்ரெயில் மூலம் காட்பாடி வந்த வாலிபரைகாட்பாடி செஞ்சிலுவை சங்க நிர்வாகிகள் வரவேற்றனர்

Leave a comment