கன்னியாகுமரி மே 7
கன்னியாகுமரி மாவட்டம் குலசேகரம் அண்டூரில் தி ஆக்சிஜன் ஃபேக்டரி ( டி ஓ எஃப் ) என்ற நடை பயிற்சி மைய திறப்பு விழா நடைபெற்றது. இதில் சுருத்தி இறைவணக்கம் பாட முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும் பல்வேறு கல்வி நிறுவனங்கள் மற்றும் அமைப்புகளின் தலைவருமான அப்பு நடேசன், தலைமையில் சமூக சேவகர் பசுமை நாயகன் மருத்துவர் தி. கோ. நாகேந்திரன் கொரோனாவை எதிர்த்து போராடிய முதல் தேசிய போராளி முன்னிலையில் விழா நடைபெற்றது, இந்நிகழ்வில் பரமேஸ்வர நாயர் செயற்குழு உறுப்பினர் என். எஸ். எஸ.காரியகம் ,பி.டி. செல்லப்பன் தலைவர் ஆயக்கோடு பஞ்சாயத்து, ராஜரத்தினம் முன்னாள் தலைவர் குலசேகரம் டவுன் பஞ்சாயத்து, ராஜசேகரன், தலைவர் ஆல் இந்தியா எம்ஜிஆர் அசோசியேஷன், டாக்டர் பி. கிருஷ்ண பிரசாத் ஆகியோர் திருவிளக்கேற்றி சிறப்பித்தனர். சீபா பிரசாத் வந்தோரை வரவேற்றுப் பேசினார். விளக்கு உரையாக டாக்டர் கிருஷ்ண பிரசாத் நிறுவனர் நடைப்பயிற்சி முகாமின் செயல்பாட்டை விவரித்தார். டாக்டர் மகிழன் குழந்தைகளுக்கான நடை பயிற்சியை தொடங்கி வைத்தார். பால்வளத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ் இளைஞர்களுக்கான சைக்கிள் பயிற்சியை தொடங்கி வைத்து வாழ்த்துரை கூறுகையில் இந்த மையம் இப்பகுதியில் உள்ள மக்களுக்கு நல்ல பயன்படும் இயற்கை சூழலில் மக்கள் கூடுகை பயனுள்ளதாக அமையும் என்றார். மருத்துவர் தி.கோ. நாகேந்திரன் சமூக சேவகர் கூறுகையில் கொரோனா காலகட்டத்தில் பிராணவாயுவின் பற்றாக்குறையால் ஏற்பட்ட துயரங்களையும் அதற்கு தன்னால் செய்யப்பட்ட நிவர்த்தி பணிகளையும் எடுத்துரைத்து இந்த மையமானது விஞ்ஞானி அப்துல் கலாம் எண்ணத்தையும், சித்தர்களின் வழிகாட்டுதலையும் பிரதிபலிக்கும் வகையில் அமைந்துள்ளது எனவே இந்த இயற்கை சூழலில் அமைந்துள்ள மையத்தை பயன்படுத்தி நாமும் ஆரோக்கியமாக வாழ வேண்டுவதோடு இதை ஏற்பாடு செய்த மருத்துவர் கிருஷ்ணப்பிரசாத்தையும், குடும்பத்தினரையும் இறைவன் அருள் செய்ய வேண்டுகிறேன் என்றார். காவல்துறை ஆய்வாளர் பாலமுருகன் பயனாளிகளுக்கு வஸ்திரதானம் வழங்கினார். விழாவிற்கான ஒருங்கிணைப்பாளராக மங்கலம் ராதாகிருஷ்ணன் ஏற்பாடு செய்திருந்தார். கவிதா ஆயக்கோடு பஞ்சாயத்து உறுப்பினர் சிறப்பு அறிவிப்பாளராக செயல்பட்டார் . விழாவில் கன்னியாகுமரி மாவட்ட அரசு வழக்கறிஞர் ஜான்சன், வினோத் ராய் காங்கிரஸ் மண்டல தலைவர் திருவட்டார், சடையப்ப நாயர் பொதுச் செயலாளர் என் எஸ். எஸ். காரியகம் மற்றும் முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.