நாகர்கோவில் மே 2
குரு பகவான் ஒவ்வொரு ஆண்டும் ஒரு ராசியிலிருந்து மற்றொரு ராசிக்கு மாறுவது வழக்கம். அந்த வகையில் இந்த ஆண்டு குரு பகவான் மேஷ ராசியிலிருந்து ரிஷப ராசிக்கு இடம் பெயர்கிறார். இதனால் ரிஷபம், மிதுனம், விருச்சிகம், மகரம் ஆகிய ராசிக்காரர்களுக்கு நற்பெயர்கள் கிடைக்கும். மேஷம், கன்னி, தனுசு ஆகிய ராசிக்காரர்களுக்கு மத்திய பலன்கள் கிடைக்கும். கடகம், சிம்மம், கும்பம், மீனம் ராசிக்காரர்களுக்கு பரிகார பூஜைகள் செய்து கொள்ள வேண்டிய காலகட்டம். எனவே பக்தர்கள் இந்த குருப்பெயர்ச்சி நாளில் கோவில்களுக்கு சென்று குருபகவான் எழுந்தரியுள்ள கோயில்களுக்கு சென்று வழிபாடுகளும், சிறப்பு பூஜைகளும் செய்வது வழக்கம். அந்த வகையில் கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அருகே கள்ளியங்காடு சிவன் கோவிலில் குருப்பெயர்ச்சியை முன்னிட்டு ஓம குண்டங்கள் அமைத்து பரிகார பூஜைகளும், சிறப்பு பூஜைகளும் நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு வழிபாடுகளையும், பரிகார பூஜைகளையும் செய்தனர்.
குருப்பெயர்ச்சியை முன்னிட்டு கள்ளியங்காடு சிவன் கோவிலில் ஓம குண்டங்கள் வளர்த்து பரிகார சிறப்பு பூஜை நடைபெற்றது.

Leave a comment