நாகர்கோவில் மே 8
கன்னியாகுமரி மாவட்டம் ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மாணவர் பேரவை மற்றும் மருத்துவ நிர்வாகம் சார்பில் குமரி லெமூர் கடல் அலையில் சிக்கி பலியான ஐந்து மருத்துவ மாணவர்களுக்கு மருத்துவமனை நிர்வாக அரங்கம் முன்பு வைத்து மௌன அஞ்சலி செலுத்தபட்டது- இதில் 150-க்கும் மேற்பட்ட அரசு மருத்துவ கல்லூரி மாணவர்கள் கலந்து கொண்டனர்.
குமரி மாவட்டம் கணபதிபுரம் பகுதியை சேர்ந்தவர் முத்துகுமார் 24 இவர் திருச்சியில் உள்ள ஒரு தனியார் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பயின்று பயிற்சி மருத்துவராக பணியாற்றி வருகிறார். இவரது அண்ணன் திருமணம் நேற்று முந்தைய தினம் நடைபெற்றது இதற்காக முத்துக்குமாருடன் பயின்று வரும் 12 மாணவ மாணவிகள் , நேற்று முன்தினம் கன்னியாகுமரி வந்துள்ளனர் திருமணம் முடித்துவிட்டு நேற்று கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள சுற்றுலா தளங்களுக்கு சென்று வந்த நிலையில் நேற்று காலை லெமூர் கடற்கரைக்கு சுற்றுலா வந்துள்ளனர் அப்போது ராட்சஸ அலை இழுத்துச் சென்றது இதில் 5 பேர் பலியானார்கள். பலியான ஐந்து மருத்துவ மாணவர்கள் மற்றும் மாணவிகளுக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவிக்கும் வகையில் கன்னியாகுமரி மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மாணவர் பேரவை மற்றும் மருத்துவ நிர்வாகம் சார்பில் ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை நிர்வாக அலுவலகம் முன்பு வைத்து நேற்று காலை 2 நிமிடம் மௌன அஞ்சலி செலுத்தபட்டது. இதில் 150-க்கும் மேற்பட்ட மருத்துவ கல்லூரி மாணவர்கள் மற்றும் கல்லூரி நிர்வாக மருத்துவர்கள் கலந்து கொண்டு தனது இரங்கலை தெரிவித்தனர்