கன்னியாகுமரி மே 10
குமரி மாவட்டம் மேற்கு தொடர்ச்சி மலையை சுற்றியுள்ள பகுதிகளில் நேற்று நள்ளிரவு முதல் விடிய விடிய பெய்த மழையால் வெயிலின் தாக்கத்திலிருந்து மக்கள் விடுபட்டு மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
கன்னியாகுமரி மாவட்டத்தில் வரலாறு காணாத அளவில் வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்து வருகிறது. இந்நிலையில் கடந்த ஒரு வார காலமாக மேற்கு தொடர்ச்சி மலையும் அதனை சார்ந்த கிராம பகுதிகளில் விட்டு விட்டு மழை பெய்து வந்தது. ஆனால் நாகர்கோவில் போன்ற நகர் பகுதியில் வெயிலின் தாக்கம் குறையவில்லை இந்நிலையில் நேற்று இரவு மேற்கு தொடர்ச்சி மலை மற்றும் சார்ந்த பகுதிகளில் விடிய விடிய மழை பெய்தது மாவட்டத்தில் அதிகபட்சமாக சிற்றாறு இரண்டு அணை பகுதியில் 33 மில்லிமீட்டர் மழை பதிவாகியுள்ளது. இதேபோன்று பெருச்சாணி அனை பகுதியில் 32 மில்லிமீட்டர் மழையும், புத்தன் அனை பகுதியில் 26 மில்லி மீட்டர் மழையும் பதிவாகியுள்ளது. இதனால் முக்கிய அணைகளுக்கு நீர்வரத்து அதிகரிக்க தொடங்கியுள்ளது 42 அடி கொள்ளளவு கொண்ட பேச்சிப்பாறை அனையினுடைய நீர்மட்டம் 44.13 அடியாக உயர்ந்துள்ளது. அனைக்கு வினாடிக்கு 129 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது – 77 அடி கொள்ளளவு கொண்ட பெருஞ்சாணி அணையினுடைய நீர்மட்டம் 47.25 அடியாக உயர்ந்துள்ளது. அனைக்கு வினாடிக்கு 68 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. இந்த கடும் கோடையிலும் கூட அனைகளுக்கு தண்ணீர் வரத்து தொடங்கியுள்ளது. மேற்கு தொடர்ச்சி மலை அதனை சார்ந்த கிராமங்களில் பெய்து வரும் இந்த மழையினால் வெயிலின் தாக்கத்திலிருந்து விடுபட்டு மக்களும் விவசாயிகளும் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.